பாக்.,கில் ரூ.5000க்கு மனைவியை விற்ற கணவன்; 21 நாட்கள் கூட்டு பலாத்காரம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
லாகூர்: கட்டிய கணவனே, மனைவியை ரூ.5,000க்கு விற்பனை செய்ய, அப்பெண்ணை 4 பேர்கள் சேர்ந்து, 21 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது வடக்கு சர்கோதா. இந்த ஊர் லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு, தனது மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு, கணவனே 4 நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். 21 நாட்களுக்கு விற்பனை
Pakistan, woman, gang raped, sold, husband

லாகூர்: கட்டிய கணவனே, மனைவியை ரூ.5,000க்கு விற்பனை செய்ய, அப்பெண்ணை 4 பேர்கள் சேர்ந்து, 21 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது வடக்கு சர்கோதா. இந்த ஊர் லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு, தனது மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு, கணவனே 4 நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். 21 நாட்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அந்த பெண்ணை, 4 பேரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய அந்த பெண், உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.


latest tamil news



ஆனால் அப்புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தன் கணவன் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு எதிராக அப்பெண், சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து நவ.,2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-நவ-202014:01:14 IST Report Abuse
Rafi வழக்கு பதிய விட்டால் அங்கெல்லாம் அரசியல் குறுக்கீடு செய்ய முடியாது , தண்டனை விரைந்து கிடைத்துவிடும், பல முன்னாள் அரசு தலைவர்கள் கூட பதவியில் இருந்தபோதே தண்டனைக்குள்ளானார்கள் என்பதை உலகம் அறியும்.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
31-அக்-202015:26:12 IST Report Abuse
S.P. Barucha உலகத்திலேயே இஸ்லாமிய சமூகத்தில்தான் அவர்களுக்குள்ளே குண்டு வைப்பது, மியான்மரில், சீனா,ஈராக் ,பாக்கிஸ்தான், ஆப்கனிஸ்தான், இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒரு பிரிவு இஸ்லாமியர்கள், அல்லாவை வணங்குபவர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் ,பெண்கள் கிராமம் கிராமமாக கற்பழிக்கப் படுகிறார்கள். இதையெல்லாம் ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட இந்தியாவிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் கூட தெரிவிப்பதில்லை. பிரான்சில் நடந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் , அதிபர் மகிரோனுக்கு எதிராக இங்கு போராட்டம் செய்வது மிகவும் தண்டிக்க தக்கது. கண்மூடித்தனமாக கத்தியில் அப்பாவி மக்களை குத்துவது மிருகத்தனமான செயல்.இந்திய அரசும் தமிழக அரசும் இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது.இந்தியாவில் உண்மையில் சிறுபான்மையினர் என்றால் அது பார்சி இன மக்கள் தான் அவர்களின் செயல்பாடு எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறது ஆனால் சில இஸ்லாமிய இயக்கங்கள் இந்தியாவிற்கும் , மக்களுக்கும் எதிராக செயல்படுவது கண்டனத்திற்கு உரியது.
Rate this:
Cancel
Jayakumar Charles - jeddah,சவுதி அரேபியா
31-அக்-202013:58:44 IST Report Abuse
Jayakumar Charles இத விட மோசமா இந்தியாவிலும் குறிப்பா உத்திர பிரதேசத்தில நடக்காததா ...இதுக்கு யாரு பதில் சொல்ல போறீங்க .......
Rate this:
Jayvee - chennai,இந்தியா
01-நவ-202020:01:00 IST Report Abuse
Jayveeஅவ்வளவு ஏன்.. பாதிரியார் கர்ப்பழிக்கிறான் . ஆனா அவனை போப்பு காபிடித்திடுறாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X