லாகூர்: கட்டிய கணவனே, மனைவியை ரூ.5,000க்கு விற்பனை செய்ய, அப்பெண்ணை 4 பேர்கள் சேர்ந்து, 21 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது வடக்கு சர்கோதா. இந்த ஊர் லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு, தனது மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு, கணவனே 4 நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். 21 நாட்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அந்த பெண்ணை, 4 பேரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய அந்த பெண், உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ஆனால் அப்புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தன் கணவன் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு எதிராக அப்பெண், சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து நவ.,2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE