பொது செய்தி

இந்தியா

தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறைவு

Added : அக் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: கொரோனா பிரச்னையால், தங்கத்திற்கான தேவை, 30 சதவீதம் குறைந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.தங்கத்திற்கான தேவை குறித்து, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, ஜூலை - செப்., வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 30 சதவீதம் குறைந்து, 86.60 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, 2019ல், இதே காலாண்டில், 123.90 டன்னாக உயர்ந்திருந்தது. இதே காலத்தில், விற்பனையான
India, gold demand, declines

மும்பை: கொரோனா பிரச்னையால், தங்கத்திற்கான தேவை, 30 சதவீதம் குறைந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.

தங்கத்திற்கான தேவை குறித்து, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, ஜூலை - செப்., வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 30 சதவீதம் குறைந்து, 86.60 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, 2019ல், இதே காலாண்டில், 123.90 டன்னாக உயர்ந்திருந்தது. இதே காலத்தில், விற்பனையான தங்கத்தின் மதிப்பு, 4 சதவீதம் குறைந்து, 41 ஆயிரத்து, 300 கோடியில் இருந்து, 39 ஆயிரத்து, 510 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


latest tamil news


நடப்பாண்டு, ஏப்., - ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 70 சதவீதம் குறைந்து, 64 டன்னாக சரிவடைந்திருந்தது.ஊரடங்கு சிறிதளவு தளர்த்தப்பட்டதை அடுத்து, தங்கத்திற்கான தேவை, மூன்றாவது காலாண்டில் அதிகரித்து உள்ளது. எனினும், மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் ஆபரண தங்கத்தின் தேவை, 48 சதவீதம் குறைந்து, 101.60 டன்னில் இருந்து, 52.80 டன்னாக சரிவடைந்துள்ளது.

இதே காலத்தில், விற்பனை செய்யப்பட்ட தங்க ஆபரணங்களின் மதிப்பும், 29 சதவீதம் குறைந்து, 33 ஆயிரத்து, 850 கோடியில் இருந்து, 24 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், பருவ மழை, குறைவான சுப முகூர்த்த தினங்கள், பண்டிகைகள் ஏதுமில்லாதது போன்றவை காரணமாக, தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. அதேசமயம், 'டிஜிட்டல்' முறையில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-202019:25:55 IST Report Abuse
தமிழவேல் 6 வருடத்துக்கு முன்னால இருந்த விலைக்கும், இப்போ உள்ள விலை வித்தியாசமும் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X