பொது செய்தி

இந்தியா

எவ்வளவு சம்பாதிக்கிறீங்க? கூகுளிடம் பார்லி குழு கேள்வி

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியாவில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள்' என, கூகுள், பேடிஎம் நிறுவனங்களிடம், பார்லி குழு கேள்வி எழுப்பியுள்ளது.தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா தொடர்பாக, வலைதள நிறுவனங்களின் உயரதிகாரிகளிடம், பா.ஜ., - எம்.பி., மீனாட்சி லேகி தலைமையிலான பார்லி குழு விசாரித்து வருகிறது. அதன்படி, 'பேஸ்புக், டுவிட்டர், அமேசான்' நிறுவன உயரதிகாரிகள், பார்லி., குழு முன், ஆஜராகி
google, paytm, கூகுள், பேடிஎம்

புதுடில்லி: 'இந்தியாவில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள்' என, கூகுள், பேடிஎம் நிறுவனங்களிடம், பார்லி குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா தொடர்பாக, வலைதள நிறுவனங்களின் உயரதிகாரிகளிடம், பா.ஜ., - எம்.பி., மீனாட்சி லேகி தலைமையிலான பார்லி குழு விசாரித்து வருகிறது. அதன்படி, 'பேஸ்புக், டுவிட்டர், அமேசான்' நிறுவன உயரதிகாரிகள், பார்லி., குழு முன், ஆஜராகி விளக்கம் அளித்தனர்.நேற்று, கூகுள், பேடிஎம்., நிறுவனங்களின் உயரதிகாரிகள் நேரில் ஆஜராகினர்.

இது குறித்து, பார்லி., நிலைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: நிலைக் குழு, இந்தியாவில் கூகுள் நிறுவனம், அதன் கூகுள் பே, யூடியூப் உள்ளிட்ட பிரிவுகள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறது, எவ்வளவு வரி செலுத்துகிறது என, கேட்கப்பட்டது. தனி நபர் தகவல்கள், எங்கு, எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சேமிக்கப்படுகின்றன என, தெரிவிக்குமாறு கோரப்பட்டது.


latest tamil news


கூகுள், பேடிஎம்., நிறுவனங்களில், சீன நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு விபரங்கள் கோரப்பட்டன. அத்துடன், சீன நிறுவனங்களுடன் உள்ள வர்த்தக தொடர்பு குறித்தும் விரிவாக கூறுமாறு வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S BASKAR - coimbatore,இந்தியா
30-அக்-202020:52:58 IST Report Abuse
S BASKAR எல்லா வங்கிகளும் ஏ டி எம் கார்டுகளை தந்துள்ளது . நெட் பேங்கிங் வசதியும் தந்துள்ளது . மொபைல் வாங்கி வசதியும் தந்துள்ளது .அப்புறம் எதுக்கு pay tm , g pay போன்ற இடைத்தரகர்கள்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
30-அக்-202015:42:16 IST Report Abuse
siriyaar கூகுல் மேற்கு இந்திய கம்பெனி, அதன் முதல் வைசிராய் சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் பிறந்து நாடுமாறியவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X