பொது செய்தி

இந்தியா

லடாக் வரைபடத்தில் விஷமம்; மன்னிப்பு கேட்ட 'டுவிட்டர்'

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: லடாக்கை, சீனாவின் பகுதியாக காட்டியதற்காக, 'டுவிட்டர்' சமூக வலைதளம் மன்னிப்பு கேட்டுள்ளது.டுவிட்டர் நிறுவனத்தின், 'ஜியோ டெக்' பதிவில், நம் நாட்டின் லடாக் யூனியன் பிரதேசம், அண்டை நாடான, சீனாவின் பகுதியாக, கடந்த, 18ம் தேதி காட்டப்பட்டது. இதற்கு, மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது பற்றி டுவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜேக்
Twitter, Defence, Inadequate, Leh, China, LocationSettings, லடாக், வரைபடம், டுவிட்டர்

புதுடில்லி: லடாக்கை, சீனாவின் பகுதியாக காட்டியதற்காக, 'டுவிட்டர்' சமூக வலைதளம் மன்னிப்பு கேட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின், 'ஜியோ டெக்' பதிவில், நம் நாட்டின் லடாக் யூனியன் பிரதேசம், அண்டை நாடான, சீனாவின் பகுதியாக, கடந்த, 18ம் தேதி காட்டப்பட்டது. இதற்கு, மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது பற்றி டுவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டோர்சிக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியிருந்தார். அதில் கூறப்பட்டதாவது:


latest tamil news



விசாரணை


யூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். லடாக்கின் தலைநகராக லே உள்ளது. ஆனால், லடாக்கை, சீனாவின் பகுதியாக நீங்கள் காட்டியது பெரும் தவறு. இவ்வாறு, அதில் அவர் எழுதியிருந்தார். மேலும், இது பற்றி பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தியது. இதையடுத்து, பார்லி., கூட்டுக்குழு முன், டுவிட்டர் அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதன்பின், மீனாட்சி லேகி கூறியதாவது: லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக காட்டிய விவகாரத்தில், டுவிட்டரின் விளக்கம் போதுமானதாக இல்லை. இதற்கு எழுத்து பூர்வமாக, டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என, பார்லி., கூட்டுக்குழு வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தொழில்நுட்ப கோளாறு


இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம், வாய்மொழியாக மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றி டுவிட்டர் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த தவறு நடந்துள்ளது. அதற்காக, டுவிட்டர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-அக்-202018:51:26 IST Report Abuse
J.V. Iyer கொழுப்புதான் வேறென்ன.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
30-அக்-202018:49:40 IST Report Abuse
M.COM.N.K.K. மன்னிப்போ மண்ணாங்கட்டியோ நீங்கவேற முதலில் திபெத்தை இந்திய பகுதிக்குள் இருக்குமாறு இந்திய எல்லையை முதலில் காட்டுங்கள் அப்புறம் பாருங்கள் அலறல் சத்தத்தை
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
30-அக்-202018:29:32 IST Report Abuse
Jit Onet இது போன்ற தவறு தவிர்க்க என்ன வழி என்று யோசிக்க வேண்டும். அந்த கம்பெனியின் ஊழியர்கள் இந்த மாப்பை செய்தவர்கள் இந்தியாவிலா அல்லது சீனாவிலா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X