அரசியல் செய்தி

தமிழ்நாடு

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்துவோம்: முதல்வர் திட்டவட்டம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
ராமநாதபுரம்: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும்
முதல்வர், பழனிசாமி, உள்ஒதுக்கீடு, பசும்பொன்

ராமநாதபுரம்: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.


latest tamil news


மரியாதை செலுத்தியப்பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:முத்துராமலிங்கம் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம். அதிமுக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் செயல்படுத்தியே தீரும். இந்த மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக அரசின் நிர்வாகம் கெட்டுப்போய் உள்ளது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டுவந்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
30-அக்-202023:35:20 IST Report Abuse
Jayaraman Sekar ஸ்டாலின் சொல்வதே சரி.... தமிழகத்துக்கு ஏழரை கூட்டியது தி மு க தான்...
Rate this:
Cancel
GOVINDARAJ G - COIMBATORE,இந்தியா
30-அக்-202022:23:25 IST Report Abuse
GOVINDARAJ G அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல் இட ஒதுக்கீடு செய்து திடிரென வாய்ப்பு தருவது தவறு. இதை முதலிலேயே அறிவித்து இருந்தால் நானும் எனது மகளை அரசு பள்ளியில் படிக்க வைத்திருப்பேன். இது நிரந்தர தீர்வு அல்ல. இந்த ஒதுக்கீடு மூலம் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்ற எனது மகள் போன்று 300 மாணவர்கள் வாய்ப்பு பறி போய் விட்டதை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும். அரசு பள்ளிகளில் பிளஸ் டூ படிப்பில் சேர இனி அதிக மாணவர்கள் சேரக்கூடும். அதற்கேற்றவாறு அரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதை செய்யுமா இந்த அரசு. உணர்ச்சி பூர்வமாக செயல்படுவது விவேகம் ஆகாது.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
30-அக்-202021:50:12 IST Report Abuse
அறவோன் பிராமணர்களுக்கு 50% சதவீதம் நிலத்தை ஒதுக்கீடு செய்து சமூக நீதியை காக்கவேண்டியதுதானே ‼️‼️‼️‼️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X