அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க.,வினர் உண்ணாவிரதம்

Added : அக் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கட்சி தலைமைக்கு எதிராகதி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் தி.மு.க., பேரூராட்சி அவைத் தலைவராக சிவசாமி, நகர செயலாளர் சின்னசாமி, பொருளாளர் தமிழ்பித்தன், துணை செயலாளர்கள் ரமேஷ், சுமதிபிரபாகர், மணிகண்டன் ஆகியோர் கடந்த ஏழு ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தனர். இந்நிலையில்,
 கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க.,வினர் உண்ணாவிரதம்


கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கட்சி தலைமைக்கு எதிராகதி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் தி.மு.க., பேரூராட்சி அவைத் தலைவராக சிவசாமி, நகர செயலாளர் சின்னசாமி, பொருளாளர் தமிழ்பித்தன், துணை செயலாளர்கள் ரமேஷ், சுமதிபிரபாகர், மணிகண்டன் ஆகியோர் கடந்த ஏழு ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தனர். இந்நிலையில், பழைய நிர்வாகிகளை நீக்கம் செய்து, புதிய நிர்வாகிககளை கட்சி தலைமை அறிவித்துள்ளது.கட்சி தலைமையின் முடிவால், அதிருப்தியடைந்த, 'மாஜி' நிர்வாகிகள் உட்பட, 40 பேர், கிணத்துக்கடவில் நேற்று, காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாஜி நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க.,வில் தீவிரமாக கட்சி பணிகளில் ஈடுப்பட்டு வந்தோம். கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இந்நிலையில், புதிய நிர்வாகிகளை அறிவிக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் செய்யவில்லை. இந்த முடிவை, கட்சி தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
30-அக்-202012:51:30 IST Report Abuse
M.COM.N.K.K. மறுபரிசீலனை தேவை இல்லை என்றே நாங்கள் நினைக்கிறோம் நீங்கள் உடனே கட்சி மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறதே அதை பயன்படுத்தலாம் மாற்று கட்சி நண்பர்கள் உங்களை அன்புடன் வரவேற்க காத்துக்கொண்டிருக்கீறார்கள் யோசிக்காதீர்கள் உடனே செயல்படுங்கள்.வெற்றி நிச்சயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X