பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவனம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பு மருந்து குறித்த சோதனையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் உள்ளன. இதில்
CoronaVaccine, ReadyForUse,  EarlyAsDecember, AdarPoonawalla, கொரோனா, தடுப்பூசி, தடுப்பு மருந்த, டிசம்பர், சீரம் நிறுவனம், பயன்பாட்டுக்கு வரும்

புதுடில்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து குறித்த சோதனையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் உள்ளன. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் ஒடிசாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா கூறியதாவது: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்.


latest tamil news




சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்து, அடுத்தாண்டின் இரண்டாம் அல்லது மூன்றாவது காலாண்டில் 100 மில்லியன் டோஸ் அளவிற்கு பயன்பாட்டிற்கு வரும். நெருக்கடி கால உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், எங்களின் பரிசோதனைகள் டிசம்பரில் முடிவடைய வேண்டும். அதேசமயம், பிரிட்டனில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அந்தப் பரிசோதனையும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
30-அக்-202018:43:18 IST Report Abuse
Mirthika Sathiamoorthi தடுப்பூசித் திட்டம் என்பது தனிநபர் பாதுகாப்பாக அல்லாமல் சமுகத்தைப் பாதுகாப்பதாக அமைந்தால்தான் அதன் வீரியம் பாதுகாக்கப்படும். இங்கே தடுப்பூசியை பற்றி உலக சுகாதார அமைப்பு ( WHO ) ஒரு கருதும் சொல்லாமல் இருப்பது? ஒருவேளை இதில் உள்ள நடைமுறை சிக்கலோ? இப்போதைய நிலையில் சோதனைகள் முடிந்து தடுப்பூசி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. எப்போது தடுப்பூசி தயாரிப்பு நிலைக்கு வரும் என்பதோ, உற்பத்தி தொடங்கும் என்பதோ தெரியாது. அப்படியே உற்பத்தி தொடங்கினாலும் நூறு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் எல்லா பகுதிகளுக்கும் சென்றடைவது எப்போது என்பதும் யாருக்கும் தெரியாது. தடுப்பூசி சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியாது. கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்க்கான தடுப்பூசி தேசிய அளவில் வழங்கப்படுமா அல்லது சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் தடுப்பூசி போடும் திட்டம் மாநில அரசுகளிடம் விடப்படுமா என்பதிலும் தெளிவில்லை. அப்படி மாநிலங்கள் பொறுப்பில் விடப்பட்டால், இன்றைய பொருளாதார நிலையில் எத்தனை மாநிலங்களால் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிவிட முடியும் ? குறைந்த கால அவகாசத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவேண்டும். குறைந்தது 65% முதல் 70% மக்கள்தொகையினருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே, கொள்ளை நோய்த்தொற்றின் பரவல் தடுக்கப்படும். இதில் எத்தனை பேருக்கு இந்த தடுப்பூசியை வாங்கும் சக்தி இருக்கும்? இத்தனைபேருக்கும் இலவசம் இன்றைய பொருளாதார சூழலில் சாத்தியமா? ஒருவேளை வாங்கும் சக்த்தியுள்ளவர்களுக்கு மட்டும் என்றால்? குறைந்த அளவு மக்களுக்கு தடுப்பூசி போடுவது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். அப்படி தடுப்பூசி போடப்பட்டவர்கள், தடுப்பூசி போடப்படாதவர்களின் நோய்த்தொற்றை எதிர்கொள்ளும்போது, தடுப்பூசியின் வீரியம் குறைந்து, அந்தத் கோவிட் வைரஸ் தடுப்பூசிக்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும் அபாயம் இருக்கிறது. இதனை நடைமுறை சிக்கலை தாண்டி தடுப்பூசி உடனே கிடைக்கும் என தோன்றவில்லை.. அனைவருக்கும் கொவைட் 19 தடுப்பூசி என்பது தவிர்க்க இயலாத நிர்பந்தம் அதுவும் போலியோ சொட்டு மருந்து போல இலவசம் என்றால் மட்டுமே இந்த நோயை முற்றிலும் இந்தியாவிலிருந்து ஒழிக்க முடியும்...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-202013:57:08 IST Report Abuse
தமிழவேல் / இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால்.../, முக்கிய அரசியல் தலைவர்கள், மேற்பதவியில் உள்ளவர்கள் என அனைவரும் முதலில் போட்டுக்கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது...
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
30-அக்-202013:34:00 IST Report Abuse
Ramalingam Shanmugam சித்தா மருத்துவத்தை ஏன் கவனத்தில் கொள்வதில்லை ? எல்லாம் பேசுகிறார் மோடி இதை பேசுவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X