காஷ்மீரில் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பயங்கரவாதிகள் ?

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தின் பா.ஜ.வை சேர்ந்த பிதா ஹூசைன், உமர் ஹஜாம் மற்றும் உமர் ரஷீத் பேக் ஆகிய 3 பேர், மீது , ஓய்.கே.போரா பகுதியில் நேற்று(அக்.,29) மாலை துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.latest tamil news


காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தின் பா.ஜ.வை சேர்ந்த பிதா ஹூசைன், உமர் ஹஜாம் மற்றும் உமர் ரஷீத் பேக் ஆகிய 3 பேர், மீது , ஓய்.கே.போரா பகுதியில் நேற்று(அக்.,29) மாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு காசிகுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


latest tamil news
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய டிஆர்எப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


கண்டனம்


இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., தலைவர் நட்டா வெளியிட்ட அறிக்கை: பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொது செயலர் பிதா ஹூசைன் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கோழைத்தனமான சம்பவம். அவரை போன்ற தேசபக்தர்களின் மறைவு நாட்டிற்கு இழப்பு. அவர்களின் தியாகம் வீண்போகாது. குடும்பத்தினருக்கு ஆறுதல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு படை உஷார்


இதனிடையே, காஷ்மீரில் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,கனடா
31-அக்-202007:10:43 IST Report Abuse
Siva the demography of Kashmir should change to identify and stop militant’s infiltration. Otherwise they will slowly bleed the arms forces and nationalists of India. Even if you have 1 brainwashed fanatic in 100 is enough to cause the damage. But I afraid that there are many. This is what happens when Muslim population on border state becomes majority. Time to make tough decision. I cannot forgive what Nehru’s family has done to this country.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-அக்-202018:49:10 IST Report Abuse
J.V. Iyer பழைய முதலைவர்களே இதற்கு காரணமா என்று ஆராயும் தருணம் இது.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
30-அக்-202017:47:17 IST Report Abuse
Rasheel அப்ரஹாமிய காட்டுமிராண்டித்தனம் ரத்தத்திலும் கொலைகளிலும் உள்ளதை நாம் காண்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X