7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து, இந்த மசோதா, சட்டமானது.அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள்
கவர்னர், உள்ஒதுக்கீடு,மசோதா,

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து, இந்த மசோதா, சட்டமானது.

அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன.அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் இதற்காக, 'தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டம்' மசோதா செப். 15ல் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. எனவே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கவில்லை. கவர்னரை முதல்வரும் அமைச்சர்களும் சந்தித்து சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.


அரசாணைஅதேநேரத்தில் நேற்று, அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையை சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.இதன் அடிப்படையில்மாணவ மாணவியரை சேர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், இந்த மசேதாவிற்கு 45 நாட்களுக்கு பின்னர் கவர்னர் பன்வாரிலால் இன்று ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கருத்தை கேட்டறிந்து இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. மசோதா குறித்து கடந்த 26ம் தேதி கவர்னர் எழுதிய கடிதத்திற்கு நேற்று தான் பதில் கடிதம் வந்தது. தொடர்ந்து , உடனடியாக மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.


கவுன்சிலிங் துவங்கும்


உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அந்த மசோதா சட்டமாகியுள்ளது. இதன் மூலம் 300 அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விரைவில் மருத்துவ கவுன்சிலிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்டாலின் நன்றி


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல், ஒப்புதல் வழங்கிய கவர்னருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க., நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கவர்னருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், கவர்னரின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும், இறுதியில் வென்றது சமூகநீதி! எப்போதும் வெல்லும் சமூக நீதி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam -  ( Posted via: Dinamalar Android App )
31-அக்-202007:24:27 IST Report Abuse
Sam I feel that Governors prior oral approvL would have been obtained prior to release of GO.this probably would have been done to avoid Sudalai from taking any credit that Governor gave approval on the pressure given to Gov by Sudalai
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-202023:31:58 IST Report Abuse
தமிழவேல் புறா மூலமா தானே குடுத்து அனுப்புறீங்க // கடந்த 26ம் தேதி கவர்னர் எழுதிய கடிதத்திற்கு நேற்று தான் பதில் கடிதம் வந்தது. // 😂😂😂
Rate this:
Cancel
GOVINDARAJ G - COIMBATORE,இந்தியா
30-அக்-202022:31:59 IST Report Abuse
GOVINDARAJ G தமிழகஅரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல் உள் இட ஒதுக்கீடு செய்து அறிவித்திருப்பது தவறு. இது நிரந்தர தீர்வு அல்ல. கடின முயற்சியுடன் படித்து அதிக மதிப்பெண் பெற்ற என் மகள் போன்ற மாணவர்களின் நிலை? தமிழக அரசு, இதை முதலிலேயே அறிவித்து இருந்தால் நானும் எனது மகளை அரசு பள்ளியில் படிக்க வைத்திருப்பேன். இந்த ஒதுக்கீடு மூலம் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்ற எனது மகள் போன்று 300 மாணவர்கள் வாய்ப்பு பறி போய் விட்டதை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும். அரசு பள்ளிகளில் பிளஸ் டூ படிப்பில் சேர இனி அதிக மாணவர்கள் சேரக்கூடும். அதற்கேற்றவாறு தமிழகஅரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதை செய்யுமா இந்த அரசு. உணர்ச்சி பூர்வமாக செயல்படுவது விவேகம் ஆகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X