24 மணி நேரத்தில் 90,000 பேருக்கு கொரோனா; அச்சத்தில் அமெரிக்கா

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 90,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை 88,973
US, 90000Cases, Covid-19, 1stTime, அமெரிக்கா, கொரோனா, பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 90,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை 88,973 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய பாதிப்பு அந்த அதிகபட்ச எண்ணிக்கையையும் தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 1,021 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு அமெரிக்காவில் 2,28,625 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news




தொற்று பாதிப்பு மற்றும் இறப்பில் உலகளவில் அமெரிக்கா இன்னமும் முதலிடத்திலேயே உள்ளது. அந்நாட்டின் மத்திய வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாளைக்கு முந்தைய நிலவரப்படி தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்து 4,85,000-க்கும் அதிகமாக இருந்தது. பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் 5.5% உயர்த்தப்பட்டுள்ளன.
கனக்டிகட், மிசிகன், நியூ ஜெர்சி, ஒஹியோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் உயிரிழப்புகள் 2 மடங்காகியுள்ளன. அதே சமயம் புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியாவில் இதை விட உயிரிழப்புகள் அதிகம் உள்ளன. கடந்த 2 வாரங்களில் மொத்தமுள்ள 50-ல் 36 மாகாணங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்களும் நோய் தொற்று அதிகரிக்க காரணமாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
31-அக்-202008:01:55 IST Report Abuse
S. Narayanan கொரோனா ஊசியை மக்களுக்கு விரைந்து கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
30-அக்-202021:05:14 IST Report Abuse
A.George Alphonse இவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலும் சரியான நேரத்தில் நடக்க வேண்டும்.அதற்கு பிரச்சாரமும் செய்யவேண்டும். அதே நேரத்தில் கொரோனா வைராசையும் கட்டுப்படுத்த வேண்டும்.எல்லாமே ஒரேநேரத்தில் எப்படி செய்ய முடியும். அதனால்தான் இங்கு இந்த நிலை.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-அக்-202001:05:32 IST Report Abuse
தமிழவேல் கட்டுப்படுத்தணும்னு வெறுமென சொல்லிகிட்டு மாஸ்க் வேணாம், இடைவெளி வேணாம், லாக்டவுன் வேணாம்னு சொன்னால் எப்புடிங்க குறையும் ? அந்த நேரத்தில அதிபர் கோல்ப் விளையாடுறாரே தெரியுமா ......
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-அக்-202020:32:35 IST Report Abuse
Vena Suna அங்கே குளிர் அதிகம். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு. நாம் பயப்பட வேண்டாம்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-அக்-202001:06:34 IST Report Abuse
தமிழவேல் முதல் அலையே இன்னும் முடியல ... இரண்டாவது அலை எட்டிப்பார்க்குது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X