பொது செய்தி

இந்தியா

விவசாயக் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாது

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பானது, பயிர்க் கடன், டிராக்டர் கடன், விவசாயக் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.கொரோனா காலத்தில் (மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த மத்திய அரசு சலுகை அறிவித்திருந்தது. ஆனால், இந்த சலுகை
InterestWaiver, Crop_TractorLoans, ReliefScheme, வட்டிக்கு வட்டி, விவசாயம், டிராக்டர், வேளாண் கடன், சலுகை, கிடையாது

புதுடில்லி: மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பானது, பயிர்க் கடன், டிராக்டர் கடன், விவசாயக் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா காலத்தில் (மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த மத்திய அரசு சலுகை அறிவித்திருந்தது. ஆனால், இந்த சலுகை காலத்தில் தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது. இந்த நடைமுறையை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா காலத்தில் ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

மேலும், வட்டிக்கு வட்டியுடன் தவணையை செலுத்தியவர்களுக்கு நிலையான வட்டிபோக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகையை நவ.,5ம் தேதிக்குள் கடன்தாரர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil newsபிப்ரவரி 29ம் தேதி கணக்கின்படி, கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கியோர், மாதத் தவணை செலுத்துவோர் தவணையுடன் கூட்டு வட்டி செலுத்தி இருந்தால், அவர்களுக்கான நிலையான வட்டி மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, கூடுதல் வட்டித்தொகை வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். ஆனால், கொரோனா காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படாது. இந்த வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்துக்குள் வரமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
31-அக்-202006:18:37 IST Report Abuse
Elango விவசாயிகள் அழிந்தால் தானே அடிமாட்டு விலையில் வாங்கி பனியாக்கள் லாபம் பார்க்கலாம். இது அவர்களின் ஆட்சி தானே ???
Rate this:
Cancel
31-அக்-202005:21:32 IST Report Abuse
Arjun Rathinasamy Interest relaxation only for Tax Payers?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-அக்-202004:28:47 IST Report Abuse
Mani . V ஆமா, பல லட்சம் கோடியை வாங்கியவனுக்கு அசலையே தள்ளுபடி செய்யும் பொழுது விவசாயிகளுக்கு எப்படி வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியும்? ஆளும் கட்சியின் சாதனை, யாரையும் விவசாயம் செய்ய விடாமல் தடுப்பதற்கான மறைமுக உத்திதான் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதற்கான காரணம். வரும் காலத்தில் இந்தியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்று முடிவு செய்யும் அதிகாரம் இந்தியாவின் மிகப்பெரிய கடன்காரர்தான் (அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் அவர்தான் மிகப்பெரிய பணக்காரராம்) முடிவு செய்வார். அத்துடன் இந்தியா மிகப்பெரிய பட்டினிச் சாவை சந்திக்கும் வேளை வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X