பொது செய்தி

இந்தியா

தேர்ச்சி விகிதம் உயர்வு; மிகவும் அதிகரிக்கும் நீட் கட்-ஆப்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: நீட் நுழைவுத் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவ சீட் பெறுவதற்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் இந்தாண்டு மிகவும் அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்தியாவில் இந்தாண்டு நீட் தேர்வு மூலம் 80,000 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 38,000 பி.டி.எஸ்., இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 42,500 இடங்கள் அரசு மருத்துவக்
NEET, HighCutOff, MedicalAdmissions, TopScorer, நீட் தேர்வு, தேர்ச்சி, உயர்வு, கட் ஆப்,

புதுடில்லி: நீட் நுழைவுத் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவ சீட் பெறுவதற்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் இந்தாண்டு மிகவும் அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் இந்தாண்டு நீட் தேர்வு மூலம் 80,000 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 38,000 பி.டி.எஸ்., இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 42,500 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள் வசம் உள்ளன. இது தவிர கூடுதலாக 10% இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு (EWS) இருக்கும். எய்ம்ஸ் மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கான இடங்களும் நீட் மூலம் நிரப்படுகின்றன. இதனால் மொத்த மருத்து இடங்கள் சிறிதளவு அதிகரித்துள்ளது.


ராஜஸ்தான் முன்னிலை!


இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் 450 முதல் 700-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,383 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு 84,117 ஆக இருந்தது. இதனால் 600-க்கு மேல் கட் ஆப் பெறுபவர்களுக்கு தான் பொது பிரிவில் மருத்துவ சீட் கிடைக்கக்கூடும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ராஜஸ்தானில் அதிகளவிலான மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றுள்ளனர். 4059 மாணவர்கள் 720-க்கு 599 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 2,551 மாணவர்கள் 600 முதல் 649 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இது கிட்டத்தட்ட 50% அதிகமாகும்.


latest tamil news"நீட் பயிற்சி வகுப்புகளுக்கான தலைநகராக ராஜஸ்தான் மாறியுள்ளது. இங்குள்ள கோட்டா எனும் நகரில் பல முன்னணி பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அங்கு ராணுவ முகாம்களில் நடத்துவது போல் மாணவர்களை நடத்தி மதிப்பெண்கள் பெற வைப்பதாக" கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராஜஸ்தானை தொடர்ந்து நமது அண்டை மாநிலமான கேரளா நீட் தேர்வில் முன்னணியில் உள்ளது.


கேரளா, தமிழகம் முன்னேற்றம்!


கடந்த ஆண்டு கேரள மாணவர்கள் ஒருவர் கூட 700 மதிப்பெண்களுக்கு மேல் பெறாத நிலையில், இந்தாண்டு 13 மாணவர்கள் அம்மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 650 முதல் 699 வரையிலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 2019-ல் 115-ஆக இருந்தது. இந்தாண்டு 630 ஆக அதிகரித்துள்ளது. 600 முதல் 649 வரை மதிப்பெண் பெற்ற கேரள மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 884 ஆக இருந்தது, இந்தாண்டு 50% உயர்ந்து 1,725 ஆகியுள்ளது. தமிழகத்தில் 2019-ல் 149 பேர் மட்டுமே 600-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்தாண்டு அவ்வெண்ணிக்கை 1,029 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
31-அக்-202014:54:57 IST Report Abuse
Rafi தேவையில்லாத நீட், படித்த பாடம் ஒன்று, கேள்வி படிக்காத பாடங்களில் இருந்து, அப்படி என்ன உயர் தரமான கேள்வி கேட்க போகின்றார்கள் என்றால் அதற்காக தேவையில்லாமல் கோச்சிங் சென்டர் மாணவர்கள் மீது திணித்து அவர்களின் பளு ஏற்றி பெற்றோர்களின் சேமிப்பை பிடிங்கி? யார் பயன் அடைகின்றார்கள் என்றால் கோச்சிங் சென்டர் நடத்தும் செல்வந்தர்கள் மட்டுமே, யாவற்றையும் எதிர் கொள்ளும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. தேவையிராத செயலை நிறுத்திவிட்டு, எந்தமாதிரிரியான மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ, அதையே இரண்டாண்டு படிக்கும் பாடத்திட்டத்தில் இணைத்து, அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களின் கட்டாப் மதிப்பெண் அடிப்படையில் வழக்கம் போல் தேர்ந்தெடுக்கலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-அக்-202004:20:39 IST Report Abuse
Mani . V ஆமா, 3000 பேர் எழுதிய தேர்வில், 88000 பேர் தேர்ச்சி பெற்றால், அது தேர்ச்சி விகிதம் உயர்வுதானே?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-அக்-202020:26:53 IST Report Abuse
Vena Suna தமிழக அரசு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X