பொது செய்தி

இந்தியா

உணவு மூலம் அதிகம் பரவும் கொரோனா: எச்சரிக்கும் ஹார்வர்டு விஞ்ஞானிகள்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வைரஸின் வீரியம் குறைந்துள்ளதால் உலக மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடத் துவங்கிவிட்டனர். சமூக விதிகளை பின்பற்றி முக கவசம் அணிந்து மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம் என உலக நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள்
FoodI, CoronaVirus, Harvard, உணவுப்பொருள், கொரோனா, பரவல், ஹார்வர்டு, விஞ்ஞானிகள், எச்சரிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வைரஸின் வீரியம் குறைந்துள்ளதால் உலக மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடத் துவங்கிவிட்டனர். சமூக விதிகளை பின்பற்றி முக கவசம் அணிந்து மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம் என உலக நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இவற்றின் மூலம் கொரோனா பரவுமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. காற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


latest tamil news




அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா பரவும் அபாயம் குறித்து ஆராயப்பட்டது.

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாகக் கழுவி வெயிலில் காயவைத்து பிறகு சமைப்பது கொரோனா தாகத்தைக் குறைக்கும். ஆனால் உணவு விடுதிகளில் இவ்வாறு செய்கிறார்களா என்பது நமக்கு தெரியாது. ஆகவே உணவு விடுதிகளில் பருகும் தண்ணீர் சாப்பிடும் உணவு ஆகியவற்றால் கொரோனா தாக்கம் மேலும் அதிகமாகும். தும்மல், இருமல் மூலமாக சிதறும் எச்சில் துளிகள் காரணமாக காற்றில் கொரோனா பரவும் வேகத்தைக் காட்டிலும் காய்கறி, பழங்கள் மூலமாக பரவும் வேகம் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே அனைவரும் வீட்டில் சமைத்து உண்பதே இதற்கு சிறந்த மாற்று வழி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
31-அக்-202007:54:27 IST Report Abuse
S. Narayanan சுத்தம் சுகாதாரம் இருந்தால் எந்த வியாதியும் நெருங்காது
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
31-அக்-202001:27:00 IST Report Abuse
பிரபு "காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாகக் கழுவி வெயிலில் காயவைத்து பிறகு சமைப்பது" - பிறகு எங்க சமைக்க வெயிலில் கயவச்சு அப்படியே சாப்பிடவேண்டியது தான்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-அக்-202000:58:49 IST Report Abuse
தமிழவேல் காய்கறிகளை சுத்த மஞ்சள் தூள் + கல் உப்பு கலந்த நீரில் நனைய வைத்து உபயோகிக்கலாம். அல்லது இன்று வாங்கியதை 24 மணிநேரம் கழித்து கழுவி உபயோகிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X