துருக்கியில் நிலநடுக்கம் நான்கு பேர் உயிரிழப்பு: கட்டடங்கள் இடிந்து தரைமட்டம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
இஸ்தான்புல் : துருக்கியில், இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான துருக்கியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்க தீவான சாமோசுக்கு இடையே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.0 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த பயங்கர
துருக்கி, சக்திவாய்ந்த, நிலநடுக்கம், கட்டடங்கள், இடிந்து, தரைமட்டம்

இஸ்தான்புல் : துருக்கியில், இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான துருக்கியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்க தீவான சாமோசுக்கு இடையே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.0 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கில் உள்ள இஸ்மிர் மாகாணத்தில், 20க்கும் மேற்பட்ட கட்டடங்கள், இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி, நான்கு பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


latest tamil news


மேலும், 120 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, 38 ஆம்புலன்ஸ்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும், 35 மருத்துவ மீட்புக் குழுக்கள் உதவியுடன், காயமடைந்தோர் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை, துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் பாரெட்டின் கோகா உறுதிபடுத்தினார்.சாமோஸ் தீவிலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202007:37:07 IST Report Abuse
ருத்ரா அதர்மம் செய்வோர்களுக்கு , தேவைக்கு மேல் சொத்துக்களை வாங்கி வாங்கி குவிப்பவர்களுக்கு எச்சரிக்கை. பாதிக்கப் படுவது மக்கள் தானே.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-அக்-202004:34:52 IST Report Abuse
J.V. Iyer மக்களுக்கு அனுதாபங்கள். ஆளுபவன் மூர்க்கனாக இருந்தால் மக்கள் என்ன செய்வார்கள். தமிழ் நாட்டிலும் மழை வெள்ளம். தமிழ் நாட்டில் கோவில் சொத்தை மாற்றி மாற்றி கொள்ளை அடிக்கும் திராவிட அரசுகள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-202023:29:14 IST Report Abuse
தமிழவேல் சுனாமி ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X