பா.ஜ.,ஆதரவாளருக்கு தகவல் ஆணையர் பதவியா? :காங்., கண்டனம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புது டில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களை மத்திய அரசு நியமிக்க உள்ள நிலையில், பா.ஜ.க., ஆதரவாளர்களை தேர்வு செய்துள்ளதாக காங்., அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள் கேட்கும் தகவல்களை

புது டில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களை மத்திய அரசு நியமிக்க உள்ள நிலையில், பா.ஜ.க., ஆதரவாளர்களை தேர்வு செய்துள்ளதாக காங்., அதிருப்தி தெரிவித்துள்ளது.



latest tamil news


அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள் கேட்கும் தகவல்களை வழங்குவதற்கும், மேல்முறையீடுகளை கவனிக்கவும் மத்திய, மாநில அளவில் தலைமை தகவல் ஆணையர்கள் பதவி உருவாக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக மத்திய தலைமை தகவல் ஆணையர் பதவி நிரப்படாமல் உள்ளது.

பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு இப்பதவிக்கான நபரை தேர்வு செய்யும். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவார். தற்போது முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி யஷ்வர்தன் சின்ஹாவை தலைமை ஆணையராக நியமிக்க முடிவு செய்துள்ளனர். பிற ஆணையர்களில் ஒருவராக பத்திரிகையாளர் உதய் மஹூர்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.



latest tamil news


யஷ்வர்தன் சின்ஹா பிரிட்டன் மற்றும் இலங்கை முன்னாள் தூதராக இருந்தவர். தற்போதுள்ள 5 ஆணையர்களில் அவரும் ஒருவர். உயர்மட்ட குழு கூட்டத்தின் போதே எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுதிரி கருத்து வேறுபாட்டை பதிவு செய்துள்ளார். “வெளிப்படைத்தன்மைக்கான சுப்ரீம் கோர்டின் வழிகாட்டுதல்கள் நியமனங்களில் பின்பற்றப்படவில்லை.

பத்திரிகையாளர் உதய் மஹூர்கர் நியமனத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆணையர் பதவிக்கே விண்ணப்பிக்காத ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வெளிப்படையாக பா.ஜ.க.,வை ஆதரிப்பவர்” என கூறியுள்ளார். உதய் மஹூர்கர் இந்தியா டுடே பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தவர். மோடி அரசாங்கம் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
31-அக்-202008:33:22 IST Report Abuse
Cheran Perumal காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதிகள், இன்ன பிற முக்கிய பதவிகளை காங்கிரசின் அடி வருடிகள் மற்றும் கம்யுனிஸ்டுகள் கைப்பற்றிக்கொண்டதின் துயரத்தை நாடு இன்று வரை எதிர்கொண்டு வருகிறது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
31-அக்-202008:06:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN India today பிஜேபிக்கு எதிரி. அதில் வேலை பார்த்தவருக்கு கொடுத்தால் காங்கிரஸ் மகிழ்ச்சி அடையவேண்டியதுதானே.
Rate this:
Cancel
ராமநாதன் நாகப்பன் CAG, RBI, RTI, Election Commission, Press எல்லாம் அதன் வேலையை செய்ததால் தான் காங்கிரஸ் அரசில் நடந்த பல தவறுகளை ஊழல்கள் வெளியில் வந்தன, அதேபோல் பல தவறுகள் நடக்காமலும் இருந்தன. பொருளாதாரம் மேலோங்கி சென்றது. பாரதிய ஜனதா ஆட்சியில் எதெல்லாம் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட, வழிநடத்த வேண்டுமோ அதை அத்தனையையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டு தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை தவறுகளும் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பது நிச்சயம். இந்த தவறுகளை ஆமோதிப்பவர்கள் வரும் காலங்களில், ஐயோ ஏன் இந்த தவறை செய்தோம் என்று வருந்துவார்கள்.
Rate this:
chidambarammurugappan@gmail.com - Kuala lumpur,மலேஷியா
31-அக்-202010:00:11 IST Report Abuse
chidambarammurugappan@gmail.comநீங்கள் இப்படியே நடுநிலை பேசிக்கொண்டிருங்கள் .இன்னும் 20 ஆண்டுகலிலே ஹிந்துக்களும் உங்கள் சந்ததியினரும் இல்லாமல் abdul அல்லது Peter என்று திரியப்போகிறார்கள் .70 வருடம் கொள்ளை கூட்டத்துக்கு அடிமையை இருந்துவிட்டு இப்ப வந்து நீதி நேர்மை நியாயம் என்று ஊளையிடுவது...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
31-அக்-202011:54:06 IST Report Abuse
Dr. Suriyaஎன்னாது காங்கிரஸ் ஊழலை வெளி கொண்டு வந்ததா...அப்போ ஸ்ட்ரிங் ஒப்பரேஷன்னு ஏதேதோ பண்ணி பத்திரிகைகள் வெளி கொண்டு வரவில்லையா? .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X