பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இதுவரை 1.88 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,30) அதிகபட்சமாக சென்னையில் 1047 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.88 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 723 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,99,173பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 228 பேருக்கும்,

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,30) அதிகபட்சமாக சென்னையில் 1047 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.88 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news



தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 723 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,99,173பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 228 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூரில் 149 பேருக்கும், திருப்பூரில் 145 பேருக்கும், ஈரோடில்115 பேருக்கும், சேலத்தில் 114 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 91 பேருக்கும், நாமக்கல்லில் 79 பேருக்கும், துாத்துக்குடியில் 71 பேருக்கும், திருவண்ணாமலையில் 63 பேருக்கும், வேலூரில் 61 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது.


உயிரிழப்பு


இன்று சென்னையில் 13 பேரும், கோவை, தஞ்சாவூரில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, நாகை, சேலம், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூரில் 2 பேரும்,செங்கல்பட்டு, கடலுார், திண்டுக்கல்,காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி,தேனியில் தலா ஒருவரும் என 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1047 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,88,280 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 557 பேரும், செங்கல்பட்டில் 214 பேரும், கடலுாரில் 190 பேரும், சேலத்தில் 189 திருவள்ளூரில் 144 பேரும், கிருஷ்ணகிரியில் 132 பேரும், திருப்பூரில் 100 பேரும், தர்மபுரியில் 97 பேரும், தஞ்சாவூரில் 95 பேரும், திருவண்ணாமலையில் 89 பேரும், கன்னியாகுமரியில் 75 பேரும், வேலுாரில் 65 பேரும், துாத்துக்குடியில் 64 பேரும், மதுரையில் 63 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X