புல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் : மன்னிப்பு கேட்குமா காங்.,?

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : 'புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்காக, பிரதமர் மோடியிடம், காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த ஆண்டு, பிப்., 14ல், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமீபத்தில் பாகிஸ்தான்
புல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் : மன்னிப்பு கேட்குமா காங்.,?

புதுடில்லி : 'புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்காக, பிரதமர் மோடியிடம், காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த ஆண்டு, பிப்., 14ல், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் பார்லிமென்டில், பேசிய அந்த நாட்டு அமைச்சர் பாவத் சவுத்ரி , 'இந்தியாவை, அவர்கள் மண்ணில் நாம் தாக்கினோம். 'இம்ரான் கான் தலைமையில், புல்வாமாவில் நாம் பெற்ற வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி' என்றார்.


latest tamil news


இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தாவது:

புல்வாமா தாக்குதலுக்கு, பாக்., தான் காரணம் என்பதை, அந்த நாட்டு அமைச்சரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுஉள்ளார்.ஆனால், இந்த தாக்குதல் பற்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது சந்தேகத்தை எழுப்பி, பொய் பிரசாரம் செய்தன.'இது பயங்கரவாத தாக்குதல் இல்லை; பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரானும், திட்டமிட்டு நடத்திய செயல்' என, காங்கிரசின் அப்போதைய தலைவர் ராகுலும், அவரது கட்சியினரும் கூறினர்.

மோடி மீதான எதிர்ப்பை, இந்தியா எதிர்ப்பாக, காங்கிரஸ் மாற்றிவிட்டது. புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்கு, பிரதமரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radha Ram - Chicago,யூ.எஸ்.ஏ
30-அக்-202023:22:37 IST Report Abuse
Radha Ram ஏன் நம்ம சைமன் கூட புளுகினாரே பிஜேபி குண்டு வைத்து நமது ராணுவத்தை வாக்குக்காக கொன்றார்கள்...பிறகு பாகிஸ்தான் மேல் பழியை போட்டார்கள் என்று. நம் நாட்டின் மீது எதிரி தாக்கினாலும் தேசப்பற்று இல்லாமல் அரசியல் செய்யும் மனிதர்களை என்ன என்று கூப்பிடுவது என்று தெரியவில்லையே ???
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
30-அக்-202022:25:51 IST Report Abuse
Kannan rajagopalan இப்போது பாகிஸ்தான் அப்படி சொல்லவே இல்லை என்று புளுகு மூட்டை வைப்பாங்க . சான் டிவி நூறு தடவை காட்டும் ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-அக்-202022:21:19 IST Report Abuse
sankaseshan இந்த விஷயமே ரெண்டு நாள்முன்பு தெரிந்தது இதற்கும் பீகார் தேர்தலுக்கும் Enna சம்மந்தம் ? காங்கிரஸ்கரனும் நம்மூர் ஊடகங்களும் மன்னிப்பு கேட்கமாட்டான் வெக் கம் கேட்ட ஜென்மம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X