லக்னோ: கோரக்பூர் ரயில்வே மருத்துவமனை கழிவறையில் சமஜ்வாதி கட்சி கொடி கலரில் டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உ.பி.,மாநிலத்தில் பிரதான கட்சியான சமஜ்வாதி கட்சியின் கொடி சிவப்பு பச்சையுடன் நடுவில் சைக்கிள் சின்னமும் உள்ளது. கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கோரக்பூரில் உள்ள லலித் நாராயண் மிஸ்ரா ரயில்வே மருத்துவமனை கழிவறையில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் சமஜ்வாதிகட்சி கொடி கலரில் உள்ளதாக புகார் எழுந்தது.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் சமஜ்வாதி கட்சி பதிவேற்றியுள்ளதாவது, அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது, பிரதான ஒரு அரசியல் கட்சி கொடியின் வண்ணங்களை அவமதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை உடனே மாற்ற வேண்டும் . இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE