பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அக்., 31, 2003தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே உள்ள, திருக்கோடிக்காவலில், 1908 ஜூலை, 25ம் தேதி பிறந்தவர் சீனிவாசன். இளம்வயதிலேயே, இவரது குடும்பம், திருவாரூர் மாவட்டம், செம்மங்குடிக்கு இடம்பெயர்ந்தது. செம்மங்குடி நாராயண சுவாமி உட்பட, பலரிடம் இசை கற்றார். 18 வயதில், இசைக் கச்சேரி அரங்கேற்றம் செய்தார். பாரதியாரின் பல பாடல்களை, கச்சேரிகளில் பாடி பெருமை சேர்த்தார்.
  இதே நாளில் அன்று

அக்., 31, 2003

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே உள்ள, திருக்கோடிக்காவலில், 1908 ஜூலை, 25ம் தேதி பிறந்தவர் சீனிவாசன். இளம்வயதிலேயே, இவரது குடும்பம், திருவாரூர் மாவட்டம், செம்மங்குடிக்கு இடம்பெயர்ந்தது. செம்மங்குடி நாராயண சுவாமி உட்பட, பலரிடம் இசை கற்றார். 18 வயதில், இசைக் கச்சேரி அரங்கேற்றம் செய்தார்.

பாரதியாரின் பல பாடல்களை, கச்சேரிகளில் பாடி பெருமை சேர்த்தார். கைராட்டையில் தானே நுால் நுாற்று, கதர் ஆடை அணிவார்.திருவாங்கூர் ஆஸ்தானக் கலைஞராக நியமிக்கப்பட்டார். திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக் கல்லுாரி முதல்வராக, 23 ஆண்டுகள் பணியாற்றினார். சென்னை அகில இந்திய வானொலியில், கர்நாடக இசைப் பிரிவின் தலைமை தயாரிப்பாளராக, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 'பத்மபூஷண், பத்மவிபூஷண், இசைப் பேரறிஞர், சங்கீத கலாநிதி' உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.கடந்த, 2003 அக்., 31ம் தேதி, தன், 95வது வயதில் இயற்கை எய்தினார்.'செம்மங்குடி மாமா' சீனிவாச ஐயர் காலமான தினம் இன்று!


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palani appa - doha ,கத்தார்
31-அக்-202013:18:37 IST Report Abuse
Palani appa அவுங்களை மறக்கமுடியாதபடி இருக்குற ஏர்போர்ட் , ரயில்வே ஸ்டேஷன் திட்டங்கள் எல்லாத்துக்கும் பேர் வச்சு இருக்காங்களே . இந்திராகாந்தியையே ,நேருவையே ,ரஜீவகாந்தியையே ,சொல்லிக்கிட்டு இருந்தா , நாட்டுக்கு சேவை செய்த மத்தவங்களை பத்தி எப்ப நினைவு கொள்வது ? போதும் பேர் வச்சு கொண்டாடுறது . கத்தார்
Rate this:
Cancel
Kalyan - Dallas,யூ.எஸ்.ஏ
31-அக்-202011:53:18 IST Report Abuse
Kalyan இந்திரா காந்தி அவர்களை மறக்கலாமா 31.10.1984
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X