மக்கள் வரவேற்பு!

Added : அக் 30, 2020
Share
Advertisement
மக்கள் வரவேற்பு!லடாக்கின், டிராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஏழு கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள மக்கள் கூட்டணிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை, அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஓமர் அப்துல்லாதுணை தலைவர், தேசிய மாநாட்டு கட்சிஒப்புதல் வாக்குமூலம்!புல்வாமா தாக்குதலில், பாகிஸ்தானுக்கு பங்கு உள்ளது

மக்கள் வரவேற்பு!

லடாக்கின், டிராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஏழு கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள மக்கள் கூட்டணிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை, அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஓமர் அப்துல்லா
துணை தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

ஒப்புதல் வாக்குமூலம்!

புல்வாமா தாக்குதலில், பாகிஸ்தானுக்கு பங்கு உள்ளது என்பதை, அந்நாட்டு அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்தி, அவர்களை, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பில், கறுப்பு பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

வி.கே.சிங்
மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர், பா.ஜ.,

ஏன் இந்த மவுனம்?

பீஹாரின் முங்கரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வாயிலாக, ஹிந்துத்வா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் நடந்திருந்தால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என, பா.ஜ.,வினர் கொந்தளிப்பர். இப்போது ஏன் அவர்கள் வாய்மூடி உள்ளனர்?

சஞ்சய் ராவத்
எம்.பி., -- சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X