பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5.94 லட்சம் பேருக்கு சிகிச்சை

Added : அக் 30, 2020
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரசால், நேற்று வரை, 80.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 91.15 சதவீதம் பேர் குணமடைந்த நிலையில், 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும் நடந்த பரிசோதனை வாயிலாக, 48 ஆயிரத்து, 648 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.இதனால், இதுவரை

புதுடில்லி:கொரோனா வைரசால், நேற்று வரை, 80.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 91.15 சதவீதம் பேர் குணமடைந்த நிலையில், 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும் நடந்த பரிசோதனை வாயிலாக, 48 ஆயிரத்து, 648 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.இதனால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 80 லட்சத்து, 88 ஆயிரத்து, 851 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பிற்கு, 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது, 7.35 சதவீதமாகும்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று வரை, 73 லட்சத்து, 73 ஆயிரத்து, 375 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 91.15 சதவீதமாக உயர்ந்து உள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும் வைரஸ் பாதிப்பால், 563 பேர் இறந்துள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில், 156; மேற்கு வங்கத்தில், 61; சத்தீஸ்கரில், 53; கர்நாடகாவில், 45; தமிழகத்தில், 35 இறப்புகள் பதிவாகி உள்ளன.இதனால், கொரோனாவால் நேற்று வரை பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 90 என உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.50 ஆக உள்ளது.

ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையில், 43 ஆயிரத்து, 710 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.கர்நாடகா, 11 ஆயிரத்து, 91 பேருடன் இரண்டாம் இடத்திலும்; தமிழகம், 11 ஆயிரத்து, 53 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.நேற்று வரை, 10.77 கோடி பேரிடம் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X