பெண் வேட்பாளரை விமர்சித்த விவகாரம்: கமல்நாத் அந்தஸ்து பறிப்பு

Updated : நவ 01, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு வழங்கப்பட்ட, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை, தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 28 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நவ., 3ல் நடக்கவுள்ளது. இதையொட்டி, குவாலியரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் மூத்த
பெண் வேட்பாளரை விமர்சித்த விவகாரம்: கமல்நாத் அந்தஸ்து பறிப்பு

புதுடில்லி : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு வழங்கப்பட்ட, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை, தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, 28 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நவ., 3ல் நடக்கவுள்ளது. இதையொட்டி, குவாலியரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பேசும்போது, 'பா.ஜ., வேட்பாளர் இமர்தி தேவி போல, காங்., வேட்பாளர், 'அயிட்டம்' அல்ல' என்றார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ., தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அதுபோல, சிவ்ராஜ் சிங் சவுகான் குறித்தும், கமல்நாத் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த, தேர்தல் ஆணையம், கமல்நாத்திற்கு வழங்கப்பட்டுள்ள நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இனி கமல்நாத் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார செலவுகள், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும் என, தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்றவரின் தேர்தல் பிரசார செலவுகள், வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
31-அக்-202018:18:16 IST Report Abuse
Elango Kamal ji don't worry you are next cm... We are support for you...
Rate this:
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
31-அக்-202021:05:15 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு இளங்கோ காஷ்மீர் அரசியல் இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கே நீங்க ஆதரவு குடுக்கலாம்..அங்கே தான் உங்க காங்கிரேஸ் அடிமை தனம் நன்றாக வெளிச்சத்துக்கு வரும்.. உங்க தலைவரு ராவுளு எவ்வளவு அழகா சீனாவுக்கு கிண்ணி தூக்குறாரு பாருங்க.. அடிமை யின் உச்சியில் இருக்கும் கட்சி கேடு கேட்ட காங்கிரஸ்...
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-அக்-202015:07:47 IST Report Abuse
Nagarajan D காந்தி கூட்ட திருடர்கள் அனைவருமே நாட்டிற்கும் பெண்களுக்கும் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை... சின்ன பப்பு தங்கள் பிரதம அடிமை பிரதமராக இருந்தபோது, தன் கட்சியினர் கொண்டுவந்த பிரதமரின் ஒரு திட்டத்தை குப்பை என பெனாத்தியவனின் கூட்டம்.. இந்த கமல்நாத் எம்மாத்திரம்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-அக்-202012:12:27 IST Report Abuse
sankaseshan All congress people are like this only . This guy escaped during Delhi riots against Sikhs masacure after I G murder . Another rouge in TN kurumavalavan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X