புல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் : மன்னிப்பு கேட்குமா காங்.,?

Updated : நவ 01, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (9+ 14)
Share
Advertisement
புதுடில்லி : 'புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்காக, பிரதமர் மோடியிடம், காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த ஆண்டு, பிப்., 14ல், பாக்., ஆதரவுபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என,
புல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் : மன்னிப்பு கேட்குமா காங்.,?

புதுடில்லி : 'புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்காக, பிரதமர் மோடியிடம், காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த ஆண்டு, பிப்., 14ல், பாக்., ஆதரவுபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என, மத்திய அரசு குற்றஞ்சாட்டியது; இதை, பாகிஸ்தான் மறுத்தது. பாகிஸ்தான் பார்லிமென்டில், சமீபத்தில், அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி பேசுகையில், 'இந்தியாவை, அவர்கள் மண்ணில் நாம் தாக்கினோம். 'இம்ரான் கான் தலைமையில், புல்வாமாவில் நாம் பெற்ற வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி' என்றார்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தாவது:புல்வாமா தாக்குதலுக்கு, பாக்., தான் காரணம் என்பதை, அந்த நாட்டு அமைச்சரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுஉள்ளார்.

ஆனால், இந்த தாக்குதல் பற்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது சந்தேகத்தை எழுப்பி, பொய் பிரசாரம் செய்தன.'இது பயங்கரவாத தாக்குதல் இல்லை; பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரானும், திட்டமிட்டு நடத்திய செயல்' என, காங்கிரசின் அப்போதைய தலைவர் ராகுலும், அவரது கட்சியினரும் கூறினர்.

மோடி மீதான எதிர்ப்பை, இந்தியா எதிர்ப்பாக, காங்கிரஸ் மாற்றிவிட்டது. புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்கு, பிரதமரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
31-அக்-202018:08:30 IST Report Abuse
Endrum Indian அதெல்லாம் நாங்க கேட்க முடியாது நாங்க சொன்ன சொன்னது தான் நாங்க பொய்யை தான் சொல்கின்றோம் என்று எங்களுக்கே தெரியும் ஆனால் மக்களுக்குத்தான் தெரியாது - இப்படிக்கு பப்பு தி கிரேட் என்னும் ராகுல் காந்தி என்னும் ராவுல் வின்சி என்னும் 3 வயசை விட்டு வளராத 50 வயது குழந்தை
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
31-அக்-202017:11:25 IST Report Abuse
Indhuindian If you have a made a mistake or blunder you should have the grace to accept the mistake and apologise. But this is too much to expect from Congress and its cohorts
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
31-அக்-202011:55:49 IST Report Abuse
RajanRajan இந்தியாவின் உள்ளூர் அந்நிய கைக்கூலிகளை பாக் பார்லிமென்ட் எதிர்க்கட்சிகள் அடையாளம் காட்டி விட்டன. மோடி அரசு இந்த ஆள்காட்டி கூட்டத்தை முதலில் வேரறுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X