அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு :இந்த ஆண்டே அமல்

Updated : நவ 01, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கமுதி,: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை விழா நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லுார் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்,
மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு :இந்த ஆண்டே அமல்

கமுதி,: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை விழா நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லுார் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், தேனி எம்.பி., ரவீந்திரநாத் பங்கேற்றனர். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார்.காலை 10:25மணிக்கு முதல்வர் பழனிசாமி மலர்வளையம் வைத்து முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர் கூறியதாவது: தேவரை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,ஆட்சியில் 1979 ல் அக்.,30 தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. 13 கிலோ தங்கக் கவசம் செய்யப்பட்டது. பசும்பொன் நினைவிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் செழிக்க காவிரி--குண்டாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர் நலனை பாதுகாக்க மீன்பிடி துறைமுகம், துாண்டில் வலைகள், ஆழ்கடல் படகிற்கு மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.
அரசுப்பள்ளி மாணவர்களும் மருத்துவக்கல்லுாரி பயில வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உட்பட யாரும் கோரிக் வைக்காமலேயே இதை செய்துள்ளோம். இந்த கல்வியாண்டில் இது அமலுக்கு வரும்.

எங்கள் ஆட்சியில் எதைக்கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.-முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202022:27:32 IST Report Abuse
kulandhai Kannan நல்ல வேளை பெரியார் போன்றவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகள் பக்கம் போகவில்லை. போயிருந்தால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாங்கள் 69 மீட்டர்தான் ஓடுவோம் என்று சொல்லி போராடி இருப்பார்.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
31-அக்-202012:53:11 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது இங்கே சில சங்கிகள் படிப்பில் இடஒதுக்கீடு தேவை இல்லை இந்த முழுமைக்கும் ஒரே ஜாதி என்று கொண்டு வந்தால் இந்த படிப்பில் இடஒதுக்கீடு எல்லாம் இருக்காது என்று அறிவு பூர்வமா சொல்லி உள்ளார் , நாங்கள் ரெடி அனால் அவன் அவன் வீட்டு செப்டிக் TANK எல்லாம் அவனே கிளீன் பண்ணனும் , காவை அடைத்து கொண்டால் அவர்களே இறங்கி கிளீன் செய்து கொள்ள வேண்டும் நீங்கள் ஜாதி என்று சொல்லி தானே இந்த வேலை ஒரு GROUP ஐ செய்ய சொல்லுகிறர்கள் ரெடி யா , ஒரே நாடு ஒரு ஜாதி ஒரே RATION ஓரே PETROL பார்த்து நீங்கள் வாங்கிய 10% ம் கிடைக்காது ok VAA
Rate this:
31-அக்-202014:11:19 IST Report Abuse
ஆரூர் ரங்எந்த பிற்பட்ட நிலவுடைமை சாதிக்காரர் சாக்கடை அள்ளுகிறார்? நான் பார்த்ததில்லை. ஆனால் சுலப் இன்டெர்நேஷனல் எனும் தொண்டு நிறுவனம் மூலம் நாடு முழுவதும் லட்சக் கணக்கான சுத்தமான கழிவறைகளைக் கட்டி பல பிராமணர்களுக்கு அதில் வேலை வாய்ப்பளிதிருக்கிறார் பகத் எனும் பிராமணர். உங்க உறவுகள் தயாராக இருந்தால் வேலைக்கு அவரைத் தொடர்பு கொள்ளலாம.( பட்டியலினத்தார் பெயரைச்சொல்லி அவர்களையே ஏமாற்றி பிழைப்பது😡திருட்டு😎 திராவிஷர்கள்😎) ....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
31-அக்-202008:19:33 IST Report Abuse
blocked user தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண் என்று சொன்ன முத்துராமலிங்கத் தேவரை வாக்கு வங்கி அரசியலுக்காக குருபூஜை நாள் மட்டும் நினைவில் கொள்ளும் இவர்கள் எங்கே - அன்றே தேவர் பெருமானுக்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க அயராது உழைத்த சு சாமி எங்கே. இடையில் ஸ்டாலின் போல ஒரு நாளுக்கு மட்டும் பட்டையடிப்பவர்கள் வேறு நாடகம் போடுகிறார்கள்.
Rate this:
31-அக்-202014:20:59 IST Report Abuse
ஸ்டாலின் ::சாமி மகள் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துகொண்டு முஸ்லிமாவே மாறிவிட்டார் அப்போ அவரை துரத்திவிடுவீரா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X