பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் ஏரிகளுக்கு தொடர் நீர்வரத்து

Added : அக் 30, 2020
Share
Advertisement
சென்னை:வடகிழக்கு பருவ மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு, தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவை, 11.2 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. செம்பரம்பாக்கம் ஏரியில், 2.24 டி.எம்.சி., -புழலில், 2.14 டி.எம்.சி., - பூண்டியில், 1.54 டி.எம்.சி., -

சென்னை:வடகிழக்கு பருவ மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு, தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவை, 11.2 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. செம்பரம்பாக்கம் ஏரியில், 2.24 டி.எம்.சி., -புழலில், 2.14 டி.எம்.சி., - பூண்டியில், 1.54 டி.எம்.சி., - சோழவரத்தில், 0.13 டி.எம்.சி., இருப்பு உள்ளது.பூண்டி ஏரிக்கு, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து, நீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நீர், இணைப்பு கால்வாய், பேபி கால்வாய் வாயிலாக, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனிடையே, வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், நான்கு ஏரிகளுக்கும் நீர்வரத்து கிடைத்து வருகிறது. நேற்று, பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், 2 செ.மீ., - சோழவரத்தில், 4 ; புழலில், 4.7 ; செம்பரம்பாக்கத்தில், 1.3 செ.மீ., மழை பதிவானது. இதனால், கண்டலேறு அணை நீருடன், மழை நீரும் சேர்த்து, பூண்டிக்கு வினாடிக்கு, 850 கன அடி நீரும், பூண்டி ஏரியின் நீருடன், மழை நீரும் சேர்ந்து, செம்பரம்பாக்கத்திற்கு, 760 கன அடி; புழலுக்கு, 654 கன அடி; சோழவரம் ஏரிக்கு, 92 கன அடி நீரும் வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X