பொது செய்தி

தமிழ்நாடு

11 நாள் லஞ்ச வேட்டை: ரூ.4.12 கோடி சிக்கியது

Updated : நவ 01, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 11 நாட்கள் நடத்திய சோதனையில், 4.12 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கும் தீயணைப்பு துறை, சார் - பதிவாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் என, அரசு அலுவலகங்களில், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணம்
11 நாள் லஞ்ச வேட்டை ரூ.4.12 கோடி சிக்கியது

சென்னை : தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 11 நாட்கள் நடத்திய சோதனையில், 4.12 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கும் தீயணைப்பு துறை, சார் - பதிவாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் என, அரசு அலுவலகங்களில், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணம் கொடுக்காமல், எவ்வித கோப்புகளும் நகருவது இல்லை என, மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

அதனால், தமிழகம் முழுதும், அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அக்., 1ல் இருந்து அதிரடி சோதனை நடத்தி, கட்டு கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.அந்த வகையில், வேலுார் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர் செல்வம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 3.25 கோடி ரூபாயை கைப்பற்றினர்.

அத்துடன், 450 சவரன் நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருட்களும் சிக்கின. இவரது அலுவலகத்தில், 33.73 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.ஈரோடு மாவட்டம், பவானியில், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சோதனை நடத்தி, 2.31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டத்தில், இரண்டு டாஸ்மாக் கடைகளில், கணக்கில் வராத, 61 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.இதுபோல, நேற்று முன்தினத்துடன், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 அரசு அலுவலங்களில், 11 நாட்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 4.12 கோடி ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-நவ-202007:10:37 IST Report Abuse
RajanRajan லஞ்ச வேட்டையாடினீங்க சரி. ஆனால் லஞ்ச ஊழல்வாதிகளை தண்டிக்கும் அளவில் என்ன நடவடிக்கை என்பதே இங்கு உலகளாவிய கேள்வி. இன்னிக்கு வேட்டையாட்டுவீங்க நாளைக்கு இன்னொருத்தன் அதே இடத்துக்கு வந்து ஆட்டைய போடுவான். நீங்க புடிச்ச பணம் என்னுடையது அல்ல அல்லது வெளியே தூக்கி வீசிக்கிட்டு கோலாகலாமா போய்டுவானுங்களே. ஏதாச்சும் உருப்படியா தீர்வு காணுங்கள். ஒரு இறைப்பு சான்று வாங்க 500 ரூபா லஞ்சம் கொடுக்க வேண்டும். எப்படி உருப்படும் அரசு நிர்வாகம்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
31-அக்-202022:20:28 IST Report Abuse
J.Isaac கொக்கி குமாரு அந்த கேசா
Rate this:
Cancel
Bioprabhu - Madurai,இந்தியா
31-அக்-202018:03:37 IST Report Abuse
Bioprabhu சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மின்சார அலுவகத்தில் 2 முறை பெயர் மாற்றுவதற்கு பணம் கொடுத்தது 1வருடம் ஆகியும் மாற்றவில்லை. என்ன மனிதர்களோ. சத்தியம், உழைப்பு, உதவி, தர்மம் அனைத்தும் செத்துவிட்டது. கடவுள் தண்டித்தால் மட்டுமே, உலகம் திருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X