எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'நோட்டீஸ்' கொடுத்தும் சிவன் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்?

Updated : அக் 31, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, பல மாதங்கள் ஆகியும் நிலம் மீட்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டம், தேவியாக்குறிச்சி கிராமத்தில் உள்ளது சிதம்பரேஸ்வரர் கோவில். இதனுடன் சேர்ந்த உப கோவில்களுக்கு சொந்தமாக, 56 ஏக்கர் நிலமும், 11.45 ஏக்கர் கோவில் புறம்போக்கு நிலமும்
 'நோட்டீஸ்' கொடுத்தும் சிவன் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்?

சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, பல மாதங்கள் ஆகியும் நிலம் மீட்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டம், தேவியாக்குறிச்சி கிராமத்தில் உள்ளது சிதம்பரேஸ்வரர் கோவில். இதனுடன் சேர்ந்த உப கோவில்களுக்கு சொந்தமாக, 56 ஏக்கர் நிலமும், 11.45 ஏக்கர் கோவில் புறம்போக்கு நிலமும் உள்ளது.இதில், 20 ஏக்கர் நிலம், 1993ம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. கோவில் பெயரில் முதலீடு செய்யப்பட்ட அத்தொகை, வட்டியுடன் சேர்த்து, 78 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


ஏலம்மீதமுள்ள, 36 ஏக்கர் நிலம், ஏழு ஆண்டுகளுக்கு முன், 28 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கல்வி நிறுவனத்தினர், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் சிலர், அரசியல், காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி அனுபவித்து வந்ததால், ஏலம் விடாமல் தடுத்து வந்தனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, இந்த தகவலை அறிந்த ஆன்மிக நல விரும்பிகள், கோவில் நிலைத்தை மீட்டு, ஏலம் விட போராடினர்.

இது குறித்து, நமது நாளிதழிழ் விரிவான செய்தி வெளியானது. அதன் பலனாக, கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளிட்ட, 32 ஏக்கர், பாதுகாப்புடன், 4.85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.இந்நிலையில், தனியார் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு நோட்டீஸ் ஒட்டி, பல மாதங்கள் ஆகியும் மீட்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது:

சிவன் கோவிலுக்கு சொந்தமான, 8.26 ஏக்கர் நிலம், தனியார் கல்லுாரியின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த நிலத்தை, விவசாய நிலமாக, பினாமி பெயரில் ஏலம் எடுத்து வர்த்தகம் செய்து, கோடிக்கணக்கான ரூபாய் பணம் பார்க்கின்றனர்.அதேபோல, சிவன் கோவிலின் உப கோவிலான அய்யனார் கோவிலின், ௨ ஏக்கர் நிலத்தை ஆறு பேர் ஆக்கிரமித்துள்ளனர்.


தனிகவனம்நில ஆக்கிரமிப்பை அகற்ற, அறநிலையத்துறை சார்பில் முறைப்படி, 'நோட்டீஸ்' கொடுத்து, பல மாதங்கள் ஆகின்றன. அதன்பின், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.எனவே, இதுகுறித்து, அறநிலைய துறை கமிஷனர் தனி கவனம் செலுத்த வேண்டும். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
31-அக்-202023:17:24 IST Report Abuse
babu கடவுள் பேரை சொல்லி ஆட்சிக்கு வந்து, ஊர்ச்சொத்தை தனியாருக்கு விற்பவர்களை மட்டும் சிவன் கண்டுகொள்ளமாட்டாரோ?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
31-அக்-202017:53:54 IST Report Abuse
konanki சிவன் சொத்து குல நாசம். இப்படி சிவன் சொத்தை திருடும் நபர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவர்கள் குடும்பத்தில் 3 தலை முறைக்குள் பின் வரும் நிகழ்வு கள் நிச்சயம். அவர்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைவு சித்த சுவாதீனம் பிரச்சனை டிபரஷன மர பிறழ்வு என மனம்/மூளை பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.முதுகு தண்டு கோளாறுகள் கான்சர் குஷ்ட ரோகம் மலட்டு தன்மை கிட்னி பிரச்சினை லிவர் பெயில்யூர் கோடிகளில் ஒருவருக்கு வரும் லிவர் வியாதிகள் நிச்சயமாக வரும்.கோடிகளில் பணம் இருந்தாலும் தீர்க்க முடியாத வியாதிகளால் வாழ் நாள் பூராவும் கஷ்டம்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
31-அக்-202017:23:35 IST Report Abuse
Indhuindian சிவன் சொத்து குல நாசம்ன்னு யார் கிட்டே சொல்றது அத்தனையும் நாத்திக கும்பல். திராவிட அரசியல் வாதிகளுக்கும் அவர்களுக்கு அட்டையில் துணை போகும் அதிகாரிகளும் அறமற்ற நிலைய துறையும் ஒன்னும் பண்ண மாட்டாங்க மக்கள் ஏஷுச்சி வேண்டும். ஆத்திகர்கள் ஒன்று சேர்ந்து ஆர்பாட்டம் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X