பொது செய்தி

தமிழ்நாடு

மழை வேண்டி கழுதை திருமணம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம்: மழை வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சாமிகவுண்டம்பாளையம் கிராமத்தில், மழை வேண்டி, நேற்று வினோத வழிபாடு நடந்தது. இதில், ஆண், பெண் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, கழுதைகள் ஊர்வலமாக, விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. 101 தீபங்கள் ஏற்றப்பட்டு, திருவிளக்கு
 மழை வேண்டி  கழுதை திருமணம்

பல்லடம்: மழை வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சாமிகவுண்டம்பாளையம் கிராமத்தில், மழை வேண்டி, நேற்று வினோத வழிபாடு நடந்தது. இதில், ஆண், பெண் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, கழுதைகள் ஊர்வலமாக, விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.

101 தீபங்கள் ஏற்றப்பட்டு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. காப்பு கட்டுதல், பெண் வீட்டார் அழைப்பு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகளை தொடர்ந்து, கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.மழை பெய்ய வேண்டி, பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். கிராமத்தினர் கூறுகையில், 'மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், ஊர் மக்கள் இணைந்து, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். கண்டிப்பாக மழை பெய்யும் என நம்புகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
31-அக்-202010:40:04 IST Report Abuse
sahayadhas எத்தனையோ, தெய்வங்கள் த.நா உள்ளது. இவனுகளுக்கு எப்ப வட இந்தியா கலச்சாரம் பற்றியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X