சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசுகள் வெடித்த விபத்தில் 2 பேர் பலி

Added : அக் 31, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே நடந்த பட்டாசு விபத்தில், இருவர் பலியாயினர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, அக்ரஹாரம் அடுத்த பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 25; தறி தொழிலாளி. அவரும், நண்பர்கள் சிலரும் சேர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு வெடிக்க, மொத்தமாக பட்டாசுகள் வாங்கி, ராஜா வீட்டில் வைத்திருந்தனர்.அவர்கள் வாகனத்தில் இருந்து, பட்டாசுகளை இறக்கும் போதே,
 பட்டாசுகள் வெடித்த  விபத்தில் 2 பேர் பலி

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே நடந்த பட்டாசு விபத்தில், இருவர் பலியாயினர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, அக்ரஹாரம் அடுத்த பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 25; தறி தொழிலாளி. அவரும், நண்பர்கள் சிலரும் சேர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு வெடிக்க, மொத்தமாக பட்டாசுகள் வாங்கி, ராஜா வீட்டில் வைத்திருந்தனர்.

அவர்கள் வாகனத்தில் இருந்து, பட்டாசுகளை இறக்கும் போதே, அருகில் இருந்தவர்கள், 'இவ்வளவு பட்டாசை வீட்டில் வைக்காதீர்கள்; ஆபத்து' என எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ராஜா, அவரது நண்பர் ரவிக்குமார், 27, ஆகியோர் கதவை சாத்தி, பட்டாசு பாக்கெட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறி, வீடு தரைமட்டமாகியது. இதில், இருவரும் பலியாயினர்.போலீசார் கூறுகையில், 'கதவை திறந்து வைத்திருந்தால், விபத்து நடந்த அடுத்த நொடியே, அவர்கள் வெளியே வந்து தப்பி இருக்கலாம். அலட்சிய போக்கே, அவர்களை மரணம் வரை அழைத்து சென்று விட்டது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X