அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் ஒப்புதல்: கட்சி தலைவர்கள் வரவேற்பு

Updated : நவ 01, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, கவர்னர் ஒப்புதல் அளித்ததற்கு, தமிழக கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை:மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், தமிழக அரசு முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ள, கவர்னர் அறிவிப்பை மகிழ்ச்சியோடு
கவர்னர் ஒப்புதல்: கட்சி தலைவர்கள் வரவேற்பு

மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, கவர்னர் ஒப்புதல் அளித்ததற்கு, தமிழக கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை:
மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், தமிழக அரசு முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ள, கவர்னர் அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.முதல் முதலாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு குழு அமைத்தபோது, தமிழக பா.ஜ., வரவேற்றது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
மருத்துவ படிப்பில், கலந்தாய்வு நடத்தும் காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல், ஒப்புதல் வழங்கிய கவர்னருக்கு நன்றி.தி.மு.க., நடத்திய போராட்டமும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்த வேண்டு கோள்களும், கவர்னரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தன. காரணம் என்னவாக இருந்தாலும், இறுதியில் வென்றது, சமூக நீதி; எப்போதும் வெல்லும் சமூக நீதி.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி
: தமிழக அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்தின் காரணமாக, பா.ஜ.,வின் கைப்பாவையாக செயல்பட்ட கவர்னர், வேறு வழியின்றி, தமிழக அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில், இனியாவது செயல்ட வேண்டும்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
காலதாமதம் ஆனாலும், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இது, தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. மருத்துவ கல்லுாரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களின், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்காக, முதன்முதலில் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில், பா.ம.க., மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
31-அக்-202010:16:35 IST Report Abuse
vbs manian இவர்கள் எல்லாம் தங்கள் மனசாட்சியின் குரலை கேட்க வேண்டும்.சமூகத்தில் ஒரு பிரிவினரை கல்வி வேலை வாய்ப்புகளில் இருந்து ஓரம் கட்டுகிறார்கள். இவர்களின் மன குமுறல் சும்மா விடாது.
Rate this:
Cancel
chandru - navi mumbai,இந்தியா
31-அக்-202009:22:46 IST Report Abuse
chandru எடப்பாடி சிக்ஸர் அடித்து விட்டார். கமுக்கமாக , தெள்ள தெளிவாக தீர்க்க முடிவை எடுத்து நிறைவேற்றி உள்ளார் . முதல்வர் பதவி போட்டிக்கு கட்சி சரியான நபரை கட்சி தேர்ந்து எடுத்து உள்ளது . தேர்தலில் இவரின் ராஜதந்திரம் வெளிப்படும். ஸ்டாலினுக்கு நிறைய குடைச்சல் கொடுப்பர்.
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
31-அக்-202009:02:07 IST Report Abuse
Gopal இந்த சுடலையின் அறிக்கை தான் மிக நகைச்சுவையை தந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X