பொது செய்தி

தமிழ்நாடு

பொது ஊரடங்கு நீட்டிப்பா: இன்று அறிவிப்பு

Added : அக் 31, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை இன்று முதல்வர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி
பொது ஊரடங்கு நீட்டிப்பா: இன்று அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை இன்று முதல்வர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.


latest tamil news



அதன்படி ஊரடங்கு இன்று இரவு நிறைவடைய உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் இம்மாதம் 28ம் தேதி முதல்வர் பழனிசாமிஆலோசனை நடத்தினார்.அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என முதல்வர் பழனிசாமி இன்று அறிவிக்க உள்ளார்.தற்போது கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அரசு அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவை திறக்க தடை உள்ளது.இவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது இன்று தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi v - chennai,இந்தியா
31-அக்-202017:04:45 IST Report Abuse
ravi  v இன்னும் நேரம் இருக்கு. நவம்பர் இருபது தேதிக்குள் அறிவித்து விடுங்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-அக்-202014:02:19 IST Report Abuse
Ramesh Sargam பொது ஊரடங்கை நீட்டிக்கிறீர்களாளோ இல்லையோ, இந்த திருமாவளவன் போன்ற அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகளின் நாற்றம் பிடித்த வாய்க்காலுக்கு ஒரு 'ஊரடங்கு' (வாய்ப்பூட்டு) அறிவித்தால் மக்கள், குறிப்பாக பெண்கள் சந்தோஷமாக இருப்பார்கள், தைரியமாக வெளியில் நடமாடுவார்கள். முதலில் நான் கூறியதை நிறைவேற்றுங்கள்.
Rate this:
Cancel
31-அக்-202010:53:41 IST Report Abuse
சுரேஷ் புதிய தளர்வுகள் தற்போது வேண்டாம். பண்டிகை காலம் மற்றும் பருவமழை காலம் வருகிறது. கேரளா-ஓணம், கர்நாடகா-தசரா, கொல்கத்தா-துர்காபூஜா பண்டிகை காலம் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள அதிக தொற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கூடுதல் தளர்வுகள் இருந்தாலும் பரவாயில்லை. கோயம்பேட்டினால் அரசு பட்ட துயரம் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X