இளைஞருக்கு விழுந்த அடிகொரோனா காலம் என்பதால் இளைஞர் ஒருவர் ஜிம்முக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்ய நினைக்கிறார். அதற்காக, வீட்டின் கதவில், 'ரோப்' கட்டி, அதை இழுத்து உடற்பயிற்சி செய்கிறார். அப்போது, எடை தாங்காமல் கதவு கழன்று அவரது முகத்தில் பலமாக மோதி விடுகிறது. இதனால், அந்த இளைஞரின் முகத்தில் ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ காட்சிக்கு நெட்டிசன்கள் பலரும், இதுபோன்ற உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது கவனம் தேவை என கருத்து பதிவிட்டுள்ளனர்.வாய்க்காலில் விழுந்த சிறுவன்வயலில், மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, ஒருவன் மட்டும் அங்கிருந்த தடுப்பு ஒன்றின் மீது ஏறுகிறான். பின்னர் அங்கிருந்து வயலில் குதிக்கிறான். ஆனால், கால் தவறி வயலில் குதிக்காமல் அங்கிருந்த சேறும் சகதியுமான வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து விடுகிறான். பின்னர், அவனது நண்பர்கள் அவனது காலை பிடித்து இழுத்து காப்பாற்றுகின்றனர். மொபைல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், வலைதளங்களில் வைரலாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.திருடனுக்கு நேர்ந்த கதிஒரு சிறுவன் மொபைல் போனை பார்த்தபடி சாலையில் நடந்து செல்கிறான். அப்போது, பின்னால், மூன்று சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சிறுவனின் கையில் இருந்த மொபைல்போனை பிடுங்கி விடுகிறார். ஆனால், மூன்று சக்கர வாகனம் என்பதால், ஒரு பக்கமாக சாய்ந்து விடுகிறது. இதனால், அந்த திருடனுக்கு முகத்தில் அடிபட்டு காயத்தோடு அங்கிருந்து தப்பிச் செல்கிறான். மொபைல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சி, வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சுதாரித்துக் கொண்ட தந்தை இளைஞர் ஒருவர் தன் குழந்தையுடன் மரப்பாலம் ஒன்றில் அமர்ந்தபடி, கேமராவுக்கு, 'போஸ்' கொடுக்கிறார். அப்போது, குழந்தை பின்னால் சாய முயன்றபோது எதிர்பாராத விதமாக கீழே விழ நேரிடுகிறது. ஆனால், சுதாரித்துக் கொண்ட தந்தையோ உடனே குழந்தையை பிடித்து விடுகிறார். தற்போது, இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE