கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (6)
Share
ஆமதாபாத்: குஜராத்தில் சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.குஜராத்தில், ஒற்றுமை சிலையான, சர்தார் படேல் சிலை அருகே, மூலிகை தோட்டத்தையும், சர்தார் படேல் உயிரியல் பூங்காவையும் பிரதமர் மோடி நேற்று(அக்.,30) திறந்துவைத்தார். 'ஆரோக்ய வனம்' என, பெரியிடப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தில், 17 ஏக்கர் பரப்பில்
PM Modi, jungle_safari, Parrots, Sardar Patel zoological park

ஆமதாபாத்: குஜராத்தில் சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.

குஜராத்தில், ஒற்றுமை சிலையான, சர்தார் படேல் சிலை அருகே, மூலிகை தோட்டத்தையும், சர்தார் படேல் உயிரியல் பூங்காவையும் பிரதமர் மோடி நேற்று(அக்.,30) திறந்துவைத்தார். 'ஆரோக்ய வனம்' என, பெரியிடப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தில், 17 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில், 380 மூலிகைகளின், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான செடிகள் வளர்க்கப்படுகின்றன.

சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு பறவைகள் இருக்கும் கூண்டிற்கு சென்றபோது, அவரது கைகளில் இரு கிளிகள் வைக்கப்பட்டன. அவைகளுடன் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடினார்.


latest tamil news



சர்தார் படேலின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படேல் சிலை அருகே, மேலும் பல திட்டங்களை, பிரதமர் இன்று துவக்கி வைக்கிறார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X