பொது செய்தி

இந்தியா

மும்பை கடற்கரை சாலை திட்டத்திற்கு நாக்பூர் வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பகம் அனுமதி

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: மும்பையில் அமைய உள்ள 10.58 கி.மீ., நீள கடற்கரை ஒட்டிய சாலை திட்டத்திற்கு நாக்பூர் முதன்மை வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பகம் அனுமதி அளித்துள்ளது.மும்பையில் பந்த்ரா மற்றும் வோர்லி இடையே அமையும் இச்சாலை ரூ 12,700 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலை அமையும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. மிக அரிய வகை உயிரினமான இவற்றை

மும்பை: மும்பையில் அமைய உள்ள 10.58 கி.மீ., நீள கடற்கரை ஒட்டிய சாலை திட்டத்திற்கு நாக்பூர் முதன்மை வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பகம் அனுமதி அளித்துள்ளது.



latest tamil news


மும்பையில் பந்த்ரா மற்றும் வோர்லி இடையே அமையும் இச்சாலை ரூ 12,700 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலை அமையும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. மிக அரிய வகை உயிரினமான இவற்றை பத்திரமாக வேறு ஒரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இரு தினங்களில் இந்த பவளப்பாறைகளை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


டிசம்பருக்குள் பவளப் பாறைகளை இடம் மாற்ற முடிவு செய்ய இருந்த நிலையில் அவற்றை நவம்பர் மாதத்திலேயே பாலம் அமைய உள்ள இடத்திற்கு அப்பால் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. நவம்பர் மாதம் கடல் ஓதம் ஏற்பட்டு கடல் நீர்மட்டம் குறையும் போது அவற்றை மரைன் லைன்ஸ் என்ற பகுதிக்கு இடம் பெயர்க்க நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
31-அக்-202008:29:13 IST Report Abuse
 Muruga Vel இந்த சாலைக்கு ராஜிவ் சாலை அல்லது பாலாசாஹேப் சாலை என்று பெயர் வைப்பார்களா ..பாந்திராவில் பாலாசாஹேப் வசித்த வீடு மாத்தோஸ்ரீ இருக்கு ..
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
31-அக்-202013:08:40 IST Report Abuse
Chowkidar NandaIndiaபைசாவிற்கு பிரயோசனமில்லாத நேரு சாலை, இந்திரா சாலை, ராஜிவ் சாலை என்று வைக்காமலிருந்தால் சரி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X