மும்பை: மும்பையில் அமைய உள்ள 10.58 கி.மீ., நீள கடற்கரை ஒட்டிய சாலை திட்டத்திற்கு நாக்பூர் முதன்மை வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பகம் அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் பந்த்ரா மற்றும் வோர்லி இடையே அமையும் இச்சாலை ரூ 12,700 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலை அமையும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. மிக அரிய வகை உயிரினமான இவற்றை பத்திரமாக வேறு ஒரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இரு தினங்களில் இந்த பவளப்பாறைகளை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பருக்குள் பவளப் பாறைகளை இடம் மாற்ற முடிவு செய்ய இருந்த நிலையில் அவற்றை நவம்பர் மாதத்திலேயே பாலம் அமைய உள்ள இடத்திற்கு அப்பால் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. நவம்பர் மாதம் கடல் ஓதம் ஏற்பட்டு கடல் நீர்மட்டம் குறையும் போது அவற்றை மரைன் லைன்ஸ் என்ற பகுதிக்கு இடம் பெயர்க்க நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE