பொது செய்தி

இந்தியா

"அரசியலில் ஊசி மருந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. உங்களால் அதுவும் அரசியல் ஆகிவிட்டது..."

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால்
"அரசியலில் ஊசி மருந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. உங்களால் அதுவும் அரசியல் ஆகிவிட்டது..."

நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.
- நடிகர் கமல்


'அரசியலில், ஊசி, மருந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, உங்களால், அதுவும் அரசியல் ஆகி விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல் அறிக்கை.கழகத் தலைவர் உத்தரவின்படி தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக அனுமதி அளித்திட உத்தரவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சரை கடிதம் மூலம் வலியுறுத்தினேன்.
- எம்.பி., கவுதம் பொன்முடி


'நீதிமன்றமே தலையிட்டும் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. நீங்கள் எழுதிய கடிதம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கவுதம் பொன்முடி அறிக்கை.'மனுஸ்மிருதியைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர்; மனுஸ்மிருதி எங்கு உள்ளது; மனுஸ்மிருதி ஒரு மாயை' என்கிறார்,- தமிழக பா.ஜ., தலைவர் முருகன். ஆம். அதுபோலவே, பா.ஜ.,வையும் எதிர்க்கத் தேவையில்லை. தமிழகத்தில், பா.ஜ., எங்கிருக்கிறது; தமிழகத்தில், பா.ஜ., என்பது ஒரு மாயை.
- எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன்


latest tamil news

'கோர்வையாக சொல்வதற்கு, பேசுவதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில், பா.ஜ.,வும் முக்கிய கட்சியாக உருவெடுத்து வருகிறதே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் அறிக்கை.தன்னை தானே இரண்டாயிர வருட அடிமை என, சொல்லிக்கொண்டு, அந்த தாழ்வு மனநிலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் புகுத்துவதில் இந்த, என்.ஜி.ஓ., போராளிகளுக்கு அப்படி என்ன ஆனந்தமோ; திராவிட வியாபாரிகள் பேசுவது பிழைப்பு, உங்களிடம் சுயமரியாதை வேண்டாமா?
- புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி


'நீங்கள் சொல்வது, உங்கள் பிரிவினரில் இன்னமும் சிலர், பிற்போக்கான எண்ணத்துடன் உள்ளதை கண்டிக்கிறீர்கள்; அப்படித் தானே...' என, கேட்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.நடந்த நிகழ்வுகளையும், தகவல்களையும், பொது வெளியில் சொல்லத்தான் வேண்டும். இல்லையென்றால் எந்த ஆற்றலும் அற்ற, உழைப்புமில்லாத, எதையும் சாதிக்காமலே திடீர், 'பெரிய மனுசர்கள், மனுசிகள்' உருவாகி, மாபெரும் சாதனையாளர்களாக ஆகிவிடுகிறார்கள்.
- தி.மு.க., செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன்.


'மறைமுகமாக, நீங்கள் சார்ந்துள்ள கட்சியை சாடுவது போல உள்ளதே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
31-அக்-202019:36:10 IST Report Abuse
Viswam இல்லாத கட்சிக்கு இவ்வளவு பொல்லாத பேச்சு
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
31-அக்-202018:00:37 IST Report Abuse
அறவோன் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதி குடுப்பான்கள்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
31-அக்-202016:31:16 IST Report Abuse
Vijay D Ratnam உலகநாயகனை கிண்டல் செய்யாதீர்கள். அதிமுக vs திமுக என்று ரணகளமாக இருக்கும் தமிழக அரசியலில் இந்த டி.ராஜேந்தர், கமல்ஹாசன், வேல்முருகன், சீமான், வைகோ, டிடிவி தினகரன் போன்றவர்கள் இல்லாவிட்டால் எப்படி களைகட்டும். அந்தக்கால தெருக்கூத்தில் ஹீரோ ஹீரோயின் தோன்றும்வரையில் பஃபூன்கள்தான் மக்களை போரடிக்காமல் என்டர்டெய்ன் பண்ணிக்கொண்டு இருப்பார்களாம். ஹீரோ இன்றோ ஆனவுடன் கூட்டத்தில் முறுக்கு விற்பார்களாம். அது மாதிரி இவிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X