பயங்கரவாதிகள் தாக்குதலை வைத்து அரசியல்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் தாக்கு

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஆமதாபாத்: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில், குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடந்த ஒற்றுமை தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அமைந்துள்ள ஒற்றுமை
modi, PmModi,மோடி, நரேந்திரமோடி

ஆமதாபாத்: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில், குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடந்த ஒற்றுமை தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அமைந்துள்ள ஒற்றுமை சிலைக்கு அவர் மரியாதை செலுத்தி, ஒற்றுமை உறுதிமொழியை செய்து வைத்தார். ஒற்றுமை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை ஒரு சீப்ளேன் சேவை தொடங்கப்படுகிறது. இது சுற்றுலாவை அதிகரிக்க உதவும். ஒற்றுமை தினத்தை கொண்டாடும் அதேநாளில் வால்மீகியின் பிறந்த நாளும் கொண்டாடப்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிரான நாட்டின் கூட்டு வலிமையும், போராடும் தன்மையும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புது அளவை எட்டியுள்ளது. இது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

காஷ்மீரின் வளர்ச்சிக்கு எதிராக இருந்த பல்வேறு தடைகளை பின்னுக்குதள்ளி தற்போது அந்த மாநிலம் புதிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணத்தை உருவாக்கி வருகிறது. இந்தியாவின் கலாசாரத்தை மீட்டெடுக்கும் வகையில் படேலின் கனவை நனவாக்கும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsநாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னிறைவு அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எல்லை சார்ந்த விஷயத்தில் இந்தியாவின் பார்வையும், அணுகுமுறையும் மாறியுள்ளது. இந்தியாவின் நிலத்தை குறி வைத்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் எல்லைகளில் 100 கி.மீ., தூரம் அளவு சாலைகள் பல்வேறு மேம்பாலங்கள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை முழுவதும் பாதுகாக்க இந்தியா தயாராக உள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும், அரசுகளும், மதங்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதம், வன்முறையால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. நமது பன்முகத்தன்மை தான் நமது அடையாளம். பிறரிடம் இருந்து நம்மை தனித்து காட்டுகிறது. நம் பன்முகத்தன்மையை நமத பலவீனமாகவே கருதுகிறார்கள். இதுபோன்ற சக்திகளை அடையாளம் கண்டு அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று நடந்த வீரர்களின் அணிவகுப்பு, புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தனக்கு நினைவூட்டியது. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியது. புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் தியாகம் செய்ததில் சிலர் வருத்தப்படவில்லை என்பதை நாடு ஒருபோதும் மறக்காது. அந்த நேரத்தில், இந்த மக்கள் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். தேசத்தின் நலனுக்காக இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்பை பாகிஸ்தான் ஒப்பு கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் அரசியல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது வலுவாக உள்ளன. எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Chennai,இந்தியா
31-அக்-202022:36:58 IST Report Abuse
Vinoth Sir, it's been more than 6 year since you have come to power. we have heard lot of blame speeches.. please focus on employment, growth, development.. let's not divide the people in the name of race, e , religion.. we are ONE and all are Indian Citizens. It's our country and let's do inclusive environment and build strong nation forever. Just look at the western countries. how different community people are living together and quality life.. please STOP hate politics..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-அக்-202020:19:53 IST Report Abuse
Ramesh Sargam ஒரு பிணம் விழுந்தால் கூட அதை வைத்து அரசியல் செய்வார்கள் நம் அரசியல்வாதிகள். அப்படிப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் தாக்குதலை வைத்து அரசியல் செய்யாமல் இருப்பார்களா?
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) பயங்கரவாதிகள் தாக்குதலை வைத்து அரசியல்/ஆதாரம் கேட்ட எதிரி கட்சிகளை ஆதாரம் இல்லாத கட்சிகள் ஆக மாற்றி விட்டார்கள் எம் இந்திய தேச மக்கள் .... இவர்களை அந்நிய நாட்டிற்கு சொம்படிக்கும் கட்சி இழுத்து மூடும் வரைக்கும் விடாதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X