இஸ்தான்புல்: மேற்காசிய நாடான துருக்கியில், நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 800 பேர் காயமடைந்தனர்.

துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்க தீவான சாமோசுக்கு இடையே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.0 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கில் உள்ள இஸ்மிர் மாகாணத்தில், 20க்கும் மேற்பட்ட கட்டடங்கள், இடிந்து விழுந்தன.கட்டட இடிபாடுகளில் சிக்கி, 26 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 800 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, 38 ஆம்புலன்ஸ்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும், 35 மருத்துவ மீட்புக் குழுக்கள் உதவியுடன், காயமடைந்தோர் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை, துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் பாரெட்டின் கோகா நேற்று உறுதிபடுத்தினார்.சாமோஸ் தீவிலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE