பொது செய்தி

தமிழ்நாடு

8 வது வாரமாக ஆன்லைனில் இலவச ஓவிய பயிற்சி

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020
Share
Advertisement
சென்னை: தினமலர் மற்றும் காம்ப்லான் இணைந்து வழங்கும் ஹாய் குட்டீஸ் ! வரைந்து பழகலாம் வாங்க! என்ற ஆன்லைன் இலவச ஓவிய பயிற்சி தொடர்ந்து 8 வது வாரமாக இன்று (அக்.,31) நடந்தது.தினமலர் நடத்தும் ‛வண்ணக்கனவு' இதில் பங்கேற்ற குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொண்டனர். ஓவியம் வரைவதற்கான பயிற்சி

சென்னை: தினமலர் மற்றும் காம்ப்லான் இணைந்து வழங்கும் ஹாய் குட்டீஸ் ! வரைந்து பழகலாம் வாங்க! என்ற ஆன்லைன் இலவச ஓவிய பயிற்சி தொடர்ந்து 8 வது வாரமாக இன்று (அக்.,31) நடந்தது.


தினமலர் நடத்தும் ‛வண்ணக்கனவு'


இதில் பங்கேற்ற குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொண்டனர். ஓவியம் வரைவதற்கான பயிற்சி அளித்தார் பிரபல ஓவியர் ரகுநாத் கிருஷ்ணா.இது ஓவியம் மட்டுமல்ல: அதற்கும் மேலே...!

‛எலிபனி' என்பது, 50 வகையான கற்பனை வடிவங்களில் யானையின் படம் வரைந்து வண்ணம் தீட்டுவதாகும்.



latest tamil news



latest tamil news



latest tamil news



நோக்கம்


பல்லுயிர் பாதுகாப்பு என்பதே பூமியின் இப்போதைய அவசிய தேவை. இதை குழந்தைகள் மத்தியில் புரிய வைக்க வேண்டும். இதற்கு ஓவியக்கலையை பயன்படுத்தி, முயற்சி எடுக்கப்படுகிறது. இங்கு, யானைகள், 50 வெவ்வேறு விளையாட்டான வடிவங்களாக வரையப்படுகின்றன.
*இதன் நோக்கம் குழந்தைகள், காட்சித்திறனுடன் சிந்திக்க உதவுவது
* ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுவதற்கான அடிப்படையை பயிற்றுவிப்பது
* யானைகள் குறித்த அறிவை குழந்தைகள் மனதில் விதைப்பது
* சுற்றுச்சூழலில் யானைகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது


தேவை


மனித - வன விலங்கு மோதல் அதிகரிக்கும் இன்றைய நிலையில், பல்லுயிர் சூழல் குறித்த விழிப்புணர்வு தேவையாக உள்ளது. உலகில் ஒவ்வொரு 15 நிமிடமும் ஒரு யானை பலியாகிறது. இந்த வேகத்தில் போனால், விரைவில் யானை இனமே அழியும் அபாயம் இருக்கிறது. அந்த நிலை வராமல் தடுக்கும் முயற்சியே இந்த ஓவியப்பயிற்சி. இதற்குத்தான், பேன்சில்ஸ்ராக் அகாடமி, Pencilsrock youtube சேனல் மூலம் மிக எளிமையாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கிறது.
பயிற்சி அளித்தவர்: ரகுநாத் கிருஷ்ணா(Pencilsrock Academy for ConservationArt)
பயிற்சி நாள்: 31.10.2020, சனிக்கிழமை மாலை 4:30 -5:30 மணி வரை
போட்டியில் ஜெயிப்பது உங்கள் முயற்சி... போனஸ் ஓவியப்பயிற்சி
8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்... பங்கேற்கும் குழந்தைகள் கட்டாயம், த்கள்வயதை குறிப்பிட வேண்டும்


போட்டியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது


1.Dmrnxt.in/t டப் செய்து ஓப்பன் செய்யவும்.
2 அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து டெலிகிராம் ஆப்- ஐ டவுன்லோட் செய்யவும்
3. டெலிகிராம் ஆப் தினமலர் சேனலில் join கிளிக் செய்து, https://t.me/dinamalardaily -ல் நுழையவும்.

நீங்கள் வரையும் சிறப்பான 25 ஓவியங்களுக்கு பரிசு உண்டு.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X