திடீர் ஊரடங்கு அறிவிப்பால் 700 கி.மீ., டிராபிக்கில் ஸ்தம்பித்த பாரிஸ்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பாரிஸ்: பிரான்சில் கொரோனா பரவலின் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்த அறிவிப்பால் கிட்டத்தட்ட 700 கி.மீ., தொலைவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால், இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும்
RecordTraffic, Paris, LockdownBegins, டிராபிக், ஊரடங்கு, பிரான்ஸ், பாரிஸ்

பாரிஸ்: பிரான்சில் கொரோனா பரவலின் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்த அறிவிப்பால் கிட்டத்தட்ட 700 கி.மீ., தொலைவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால், இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரான்சில் தற்போது கொரோனா பாதிப்பு 2வது அலை தொடங்கியுள்ளதால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. முக்கிய மற்றும் மருத்துவ பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news



அரசின் இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பால் பாரிஸ் நகரத்தை சுற்றி வாகனங்கள் அணிவகுத்தன. மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு அவசரம் அவசரமாக கிளம்பியதால், வரலாறு காணாத வாகன நெரிசலை பாரிஸ் நேற்று சந்தித்தது. கிட்டத்தட்ட 700 கி.மீ.,க்கு இந்த வாகன நெரிசல் இருந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அறிவிப்பை அடுத்து மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே கிளம்பியதால் இந்த மெகா டிராபிக் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
01-நவ-202007:27:43 IST Report Abuse
natarajan s இதெல்லாம் ஒரு விஷயமா, தினமும் பெருங்களத்தூரில் நடக்கும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தவர்களுக்கு இதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அங்கு யாரும் HORN அடித்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். நமக்கு அந்த பண்பாடு கிடையாது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-அக்-202014:40:17 IST Report Abuse
Vena Suna ஆனா அங்க போராட்டம் பண்ணி நெரிசலை அதிகம் பண்ண மாட்டாங்க இங்க தமிழகத்தில் பண்ற மாதிரி
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-அக்-202014:08:34 IST Report Abuse
தமிழவேல் அங்கு பள்ளிகள் திறந்து இரண்டுமாதங்கள் ஆகின்றன. இப்போது மாணவர்கள் 2 வாரங்கள் விடுமுறையில் இருந்து, ஊரடங்கிலும் வரும் திங்கள் பள்ளிகள் திறக்கின்றன.. வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்புவதால் இந்த கூட்டம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X