பாரிஸ்: பிரான்சில் கொரோனா பரவலின் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்த அறிவிப்பால் கிட்டத்தட்ட 700 கி.மீ., தொலைவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால், இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பிரான்சில் தற்போது கொரோனா பாதிப்பு 2வது அலை தொடங்கியுள்ளதால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. முக்கிய மற்றும் மருத்துவ பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பால் பாரிஸ் நகரத்தை சுற்றி வாகனங்கள் அணிவகுத்தன. மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு அவசரம் அவசரமாக கிளம்பியதால், வரலாறு காணாத வாகன நெரிசலை பாரிஸ் நேற்று சந்தித்தது. கிட்டத்தட்ட 700 கி.மீ.,க்கு இந்த வாகன நெரிசல் இருந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அறிவிப்பை அடுத்து மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே கிளம்பியதால் இந்த மெகா டிராபிக் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE