பொது செய்தி

தமிழ்நாடு

278 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020
Share
Advertisement
குன்னுார் : கொரோனா நேரத்திலும்,குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், கடுமையான பயிற்சி முடித்த, 278 இளம் ராணுவ வீரர்கள் இன்று சத்தியபிரமாணம் எடுத்து கொண்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் மிக பழமை வாய்ந்தது. இங்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள்
ராணுவ வீரர்கள், சத்தியபிரமாணம்

குன்னுார் : கொரோனா நேரத்திலும்,குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், கடுமையான பயிற்சி முடித்த, 278 இளம் ராணுவ வீரர்கள் இன்று சத்தியபிரமாணம் எடுத்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் மிக பழமை வாய்ந்தது. இங்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் நாட்டின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கும் முன்பு, சத்திய பிரமாணம் எடுக்கப்படுகிறது.


latest tamil news



கடின பயிற்சி முடித்த 278 இளம் ராணுவ வீரர்கள்,பயிற்சி முடித்து, இன்று சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ரெஜிமென்ட் கொடி மற்றும் தேசிய கொடியின் கம்பீரமான அணிவகுப்பு நடந்தது.


latest tamil news



எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங், 5 சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்து பேசுகையில், "இந்திய ராணுவ வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. கொரோனா நேரத்திலும், மிக கடினமான பயிற்சியை பெற்ற அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த தருணத்தில் கலந்து கொள்ள முடியாத இளம் வீரர்களின் பெற்றோர்களும், கடமைபட்டவர்கள். " என்றார்.


latest tamil news




கொரோனா காரணமாக நிகழ்ச்சியில் பெற்றோர் பங்கேற்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X