அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறந்த நிர்வாகத்தில் 2வது இடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.பி.ஏ.சி. எனப்படும் பொது விவகாரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை
Tamilnadu, CM, Palanisamy, WorkTogether, WorkHard, முதல்வர், பழனிசாமி,

சென்னை: நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.

பி.ஏ.சி. எனப்படும் பொது விவகாரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மாநிலங்களில் சமநிலை, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றில் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களில் கேரளா 1.388 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தமிழகம் 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.


latest tamil news



இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தமிழகம் இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kadaparai Mani - chennai,இந்தியா
01-நவ-202010:53:11 IST Report Abuse
Kadaparai Mani கஸ்தூரி ரங்கன் அவர்களின் தங்க வார்த்தைகளை மேலே தொடுத்துள்ளேன் . புரட்சி தலைவர் ,அம்மா வழியில் எடப்பாடியார் சாதனை தொடரட்டும் .திமுக தோற்கடிப்படும் வரும் ஆண்டு தேர்தலில் .
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
01-நவ-202006:03:53 IST Report Abuse
Elango அதுதான் நேற்று பெய்த மழையில்.தெரிந்து விட்டதே இவர்கள் ஆட்சியின் லட்சனம். இத்தனைக்கும் எங்கள் உறவினரினின் தெருவில் மழை நீர் வடிகால் என்று ஆறு மாதம் முன்பு வேலை செய்து உள்ளனர். ஒரு நாள் மழையில் வீட்டிற்குள் தண்ணீர் வந்து விட்டது....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-நவ-202005:52:16 IST Report Abuse
Mani . V "சிறந்த நிர்வாகத்தில் 2 வது இடம்" - போங்க சார் காமெடி பண்ணாமல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X