அரசியல் செய்தி

தமிழ்நாடு

பசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின்.? - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : நவ 01, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (69)
Share
Advertisement
சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளாமல் திமுக., தலைவர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக கூறி டுவிட்டரில் அவருக்கு எதிராக #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் நேற்று(அக்., 30) கடைபிடிக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது
#தேவரை_அவமதித்த_ஸ்டாலின், சமத்துவதலைவர்ஸ்டாலின்,

சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளாமல் திமுக., தலைவர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக கூறி டுவிட்டரில் அவருக்கு எதிராக #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் நேற்று(அக்., 30) கடைபிடிக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலை, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

''ஹிந்து திருமணங்களை கொச்சைப்படுத்தியவரே... கந்தசஷ்டி கவசத்தை அவதுாறாக விமர்சித்த, கருப்பர் கூட்டத்தை ஆதரித்த ஸ்டாலினே... ஆன்மிக செம்மல் பசும்பொன் தேவர் திருமகனார் புனித பூமிக்கு வராதீர்' என்று, சிலர் டுவிட்டரில் பதிவிட்டனர். சிலர், ''தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள் என, முத்துராமலிங்க தேவர் கூறினார். இரண்டிலுமே நம்பிக்கை இல்லாத தி.மு.க., ஓட்டுக்காக, அவரது குரு பூஜையில் பங்கேற்கிறது'' என, கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்த, #GobackStalin என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர்.இந்நிலையில் இன்று(அக்., 31) மற்றுமொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஸ்டாலின். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலினுக்கு அங்கு விபூதி வழங்கி உள்ளனர். அதை அவர் நெற்றியில் இடாமல் உடம்பில் பூசிக் கொண்டு பின்னர் அப்படியே உதறிவிட்டு செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. முத்துராமலிங்க தேவரை அவமதித்து விட்டதாக கூறி ஸ்டாலினுக்கு எதிராக இன்றும் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

''விபூதியை கீழே தட்டிவிட்டு போகும் உங்களை யார் தேவர் ஜெயந்திக்கு வர சொன்னது. ஓட்டுக்காக ஏன் இந்த அரசியல்.?'', இந்து மதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அங்கு போக வேண்டாம். இப்படி போய் இது போன்ற செயல்களை செய்து இந்துக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்'', ''நோன்பு கஞ்சி குடிப்பீர்கள், அப்பத்தை உண்பீர்கள், ஆனால் இந்துக்கள் தரும் விபூதியை மட்டும் நெற்றியில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஓட்டு அரசியலுக்காக நீங்கள் எந்த லெவலுக்கும் செல்வீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்து விரோதி திமுக.,'' என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், தேவர் நினைவிடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவராகவே அங்கிருக்கும் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ளும் வீடியோவையும் பதிவிட்டு, இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news

சமத்துவ தலைவர் ஸ்டாலின்


தொடர்ந்து இருதினங்களாக திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக டுவிட்டரில் எதிர்ப்பு கிளம்ப, ''சமத்துவ தலைவர் ஸ்டாலின்'' என்ற பெயரில் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ''எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம். மதவெறி பிடித்தவர்கள் மட்டுமே எங்களது எதிரி. அதை வைத்து அரசியல் நடத்துபவர்களே எங்கள் பகைவர்கள். சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்பதால் திமுக.,வை பெரும்பான்மை மக்களுக்கு விரோதி போன்று சில மதவெறி பிடித்தவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தான் இந்துக்களின் எதிரி. திமுக., அனைத்து மதத்திற்கு பொதுவானது'' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரீ-டுவீட் செய்தும், இந்து புரோகிதர்கள் ஸ்டாலினுக்கு மரியாதை செய்த பழைய போட்டோக்கள் சிலவற்றையும் பதிவிட்டு #சமத்துவதலைவர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆக்குகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
06-நவ-202010:08:47 IST Report Abuse
SENTHIL எல்லா மதமும் சம்மதம் என்பார்
Rate this:
Cancel
Magath - Chennai,இந்தியா
01-நவ-202013:55:27 IST Report Abuse
Magath தான்அ பிறந்த​ மதத்தையே இழிவாக பேசுபவன் எப்படி மற்ற மதங்களை மதிப்பான்.இவர்கள் பிழைப்புக்காக முஸ்லிம் மற்றும் கிருத்துவ சகோதர சகோதரிகளை ஏமாற்றுகிறார்கள். யாரும் இவர்தளை நமீப வேண்டாம். நீங்களே உங்களில் ஒருவரை உங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து சட்டமன்றத் தில் உங்கள் குரலை ஒலிக்கச்செய்யுங்கள். இவர்கள் பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் மட்டுமே இஸ்லாமியர்கள் / கிருத்தவர்களுக்கு நல்லது செய்வது போல் விஷம வேஷம் போடுகிறார்கள். சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் எழுப்புவதில்லை. பேசுவதற்கு திராணி இல்லாமல் எப்போதும் வெளிநடப்பு செய்வதே இவர்கள் தொழில். அப்படி இருக்க இவர்கள் யாருக்கு நல்லது செய்ய முடியும். சிந்தித்து செயல்படுங்கள். தமிழ்நாட்டில் கழகங்கள் ஆட்சியை 60 ஆண்டு பார்த்து விட்டோம். இனி கட்சிகளை நம்பாமல் உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள்.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-நவ-202012:59:42 IST Report Abuse
Saravanan திருட்டு திமுகவுக்கு வோட்டு போடாதீர்கள் சொந்தங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X