பணத்திற்காக கொரோனா பலியை உயர்த்தும் டாக்டர்கள்: டிரம்ப் குற்றச்சாட்டு

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனாவால் உயிரிழந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் பலி எண்ணிக்கையை டாக்டர்கள் உயர்த்துகின்றனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதற்காக மிச்சிகனில் உள்ள வாட்டர்போர்டு டவுன்ஷிப்பில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால்
Trump, Derides, MedicalSystem, Doctors, Inflating, CoronaVirus, DeathCounts, டிரம்ப், கொரோனா, உயிரிழப்பு, பலி, டாக்டர்கள்,

வாஷிங்டன்: கொரோனாவால் உயிரிழந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் பலி எண்ணிக்கையை டாக்டர்கள் உயர்த்துகின்றனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதற்காக மிச்சிகனில் உள்ள வாட்டர்போர்டு டவுன்ஷிப்பில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் யாராவது உயிரிழக்கும்பட்சத்தில் டாக்டர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால், பலி எண்ணிக்கையை டாக்டர்கள் உயர்த்துகின்றனர்.


latest tamil news


ஆனால், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர். உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது. தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைகிறது, மக்கள் குணமடைகின்றனர். அதற்கு நானும், எனது மனைவியும் உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-நவ-202003:17:58 IST Report Abuse
Sanny அது என்னமோ தெரியவில்லை, இந்தியாவில காய்ச்சல் அடித்தால் அதே காய்ச்சல் அமெரிக்காவிலும் அடிக்குது, அமெரிக்காவில் காய்ச்சல் அடித்தால், இந்தியாவிலும் காய்ச்சல் அடிக்குது, அமெரிக்க அதிபர் டொனால் றீகன் ஒரு நடிகர், அவர் தேர்தலில் போட்டி இட்டு வென்று அமெரிக்க ஜனாதிபதியானார், அதுக்கு அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பெரிய நடிகர் MGR தேர்தலில் போட்டி இட்டு வென்றார், அப்போது அவர் சொன்ன தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானது "அன்று அமெரிக்காவில் (நடிகர் ஜனாதிபதி ஆனார்) இன்று தமிழ்நாட்டில் (நடிகர் முதல்வர் ஆவார்) என்று. அன்னைக்கு பிடித்த காய்ச்சல் தொடருது போல,
Rate this:
Srinivasan Krishnamoorthy - Chennai,இந்தியா
01-நவ-202009:29:26 IST Report Abuse
Srinivasan KrishnamoorthyReegan became president only 4 years after MGR. Reegan became American president in 1981 while MGR was CM in 1977....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-202002:55:12 IST Report Abuse
தமிழவேல் உடல் முழுதும் பொய்...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
31-அக்-202023:40:58 IST Report Abuse
S. Narayanan உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள அரசியல் வாதிகள் மருத்துவ மனைகளுடன் கூட்டு சேர்ந்து கொரோனா கொள்ளை அடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X