வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் 3 மசோதாக்கள் அறிமுகம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசும் 3 மசோதாக்களை சட்டசபையில் இன்று (அக்.,31) அறிமுகம் செய்தது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சட்டங்களுக்கு
RajasthanGovt, Introduces, ThreeBills, Negate, Impact, FarmLaws, ராஜஸ்தான், சட்டசபை, வேளாண் சட்டம், மசோதாக்கள், அறிமுகம்

ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசும் 3 மசோதாக்களை சட்டசபையில் இன்று (அக்.,31) அறிமுகம் செய்தது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு, சட்டசபையில் 3 மசோதாக்களை நிறைவேற்றியது. அதேபோல் ராஜஸ்தானிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என ராஜஸ்தான் அரசும் அறிவித்திருந்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றிட வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி இருந்தது.


latest tamil news


அதன்படி, இன்று (அக்.,31) கூடிய சட்டசபையில், விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்களை அறிமுகம் செய்தார். அதாவது, வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிரான திருத்த மசோதாக்களை அறிமுகம் செய்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
01-நவ-202000:59:50 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran சியாமா பிரசாத் முக்ஹெர்ஜீ அவர்களை எந்த விதமாக கொன்றார்களோ தெரியாது. இப்போதுள்ள maththiya அரசை ஒழிக்க காங்கிரஸ் காரர்கள் முனைவது எடு படாது.
Rate this:
Cancel
31-அக்-202022:05:43 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Aravon Chennai, challenge you to explain the drawbacks in the Former laws. First comment with your original name
Rate this:
Cancel
31-அக்-202016:58:48 IST Report Abuse
ஆரூர் ரங் பொதுப் பட்டியலிலிருக்கும் விவசாயதுறையில் மத்திய மாநில அரசு சட்டங்களுக்குள் முரணிருந்தால் மத்திய சட்டமே மேலானது👍🏻👍🏻 மாநில சட்டத்துக்கு மதிப்பில்லை😨 என்கிறது அரசியலமைப்பு சட்டம். கோர்ட்டுகளும் 🏛உறுதிப்படுத்தியுள்ள ஒன்று. . அரசியல் சட்டத்தை இதுபோல சட்டை செய்யாதது அண்ணல் அம்பெட்கரை இழிவுபடுத்தும் செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X