சீனாவின் உதவியை நாடுவோம் என்பவர்களை சிறையில் அடையுங்கள்: சஞ்சய் ராவத்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
மும்பை: இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த 11ம் தேதி ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'சீனாவின் ஆதரவுடன்
SanjayRaut, FarooqAbdullah, China, Support, RoamingFree, சஞ்சய் ராவத், பரூக் அப்துல்லா, சீனா, ஆதரவு, சிறை

மும்பை: இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த 11ம் தேதி ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'சீனாவின் ஆதரவுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவரப்படும் என நான் நம்புகிறேன்' எனக் கூறினார்.

அதேபோல் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 23ம் தேதி செய்தியாளர்களிடம், ‛ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றினால் தான் இந்திய தேசியகொடியை ஏற்றுவோம்,' என கூறினார். இருவரின் கருத்துகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news



இந்நிலையில், இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பரூக் அப்துல்லாவோ அல்லது மெஹபூபா முப்தியோ யாராக இருந்தாலும் இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்படி பேசுபவர்கள் எப்படி சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-நவ-202014:21:51 IST Report Abuse
Rafi காஸ்மீரில் விரைந்து தேர்தல் நடத்தி நாம் ஜனநாயகத்தை நேசிக்கின்றோம் என்று உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும், அங்குள்ள மக்கள் ஐயம் இன்றி சுதந்திர காற்றை சுவாசிக்க வழி ஏற்படுத்த பட வேண்டும். இந்தியாவில் இருக்கவே அம்மக்கள் விரும்பி இந்தியாவோடு இணைத்து கொண்டார்கள், சுதந்திரமாக வலைத்தளமும், ஊடகங்களும், செய்தியாளர்களும் செயல் பட அனுமதிக்க வேண்டும். 370 நீக்கி விட்டோம் மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என்று வார்த்தை ஜாலம் போடுவதை விட, அவர்கள் அனைவரும் நம் நாட்டு குடி மக்கள், நாம் ஜனநாயகத்தை சுவாசிப்பது போல் அவர்களுக்கும் வழி ஏற்படுத்தி, அவர்களுக்கான வாழ்க்கை முறையை, அவர்களுக்கான ஆட்சியாளார்களை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ள அனுமதி கொடுத்து, சிறப்புடன் வாழ வழி அமைத்து கொடுத்து நாங்கள் இந்தியர்கள் என்று பெருமை பட பேச வைக்க அரசு முயல வேண்டும்.
Rate this:
Cancel
manojkumar.p - madurai,இந்தியா
01-நவ-202011:58:13 IST Report Abuse
manojkumar.p நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் சொன்ன கருத்து சரிதான்
Rate this:
Cancel
Maharajan - Bangalore,குவைத்
01-நவ-202010:31:34 IST Report Abuse
Maharajan அய்யா போன வருஷம் சீன பிரதமரை கூப்பிட்டு மஹாபலிபுரத்துல வச்சி நல்லா வழுக்கையுள்ள இளநீர் குடிச்சாங்க.. இதனால நாளைக்கே நாடு ராக்கெட் வேகத்துல முன்னேறும்னு பக்கத்தால் எல்லாம் விடிய விடிய முட்டு குடுத்தாங்க.. இப்போ தான் உங்களுக்கு தெரியுது அவுங்க எல்லாம் தேச துரோகின்னு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X