அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு!

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சட்டசபை தொகுதி வாரியா பிரிச்சு, மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கணும்னு, தி.மு.க.,வின் தேர்தல் வியூக வகுப்பாளர் சொல்லியிருக்காராம்... தென் மண்டலத்திற்கு மகளிர் அணி செயலர் கனிமொழி, மத்திய மண்டலத்திற்கு, தொ.மு.ச., நிர்வாகி சண்முகம், கொங்கு மண்டலத்திற்கு ஆ.ராஜா, வடக்கு மண்டலத்திற்கு எ.வ.வேலுவை பொறுப்பாளரா நியமிக்க முடிவாகி இருக்காம். இந்த நால்வரும், முதன்மை செயலர் கே.என்.நேரு
அரசல்_புரசல்_அரசியல், பொறுப்பாளர், கனிமொழி, திமுக, பார்த்திபன், செந்தில், வன்னியர்,

சட்டசபை தொகுதி வாரியா பிரிச்சு, மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கணும்னு, தி.மு.க.,வின் தேர்தல் வியூக வகுப்பாளர் சொல்லியிருக்காராம்... தென் மண்டலத்திற்கு மகளிர் அணி செயலர் கனிமொழி, மத்திய மண்டலத்திற்கு, தொ.மு.ச., நிர்வாகி சண்முகம், கொங்கு மண்டலத்திற்கு ஆ.ராஜா, வடக்கு மண்டலத்திற்கு எ.வ.வேலுவை பொறுப்பாளரா நியமிக்க முடிவாகி இருக்காம். இந்த நால்வரும், முதன்மை செயலர் கே.என்.நேரு தலைமையில செயல்படுவாங்களாம்...!


வன்னியர் ஓட்டுக்களை வளைக்க திட்டம்


தி.மு.க., கூட்டணியில, பா.ம.க., இல்லைங்கறது உறுதியாகிடுச்சு... அதேசமயத்துல, பா.ம.க.,வை எதிர்க்கும் வன்னியர் அமைப்புகளை, இழுக்க, காடுவெட்டி குருவின் மகன் கலையரசன் தலைமையயில இயங்கி வரும், மஞ்சள் படை அமைப்பை, தி.மு.க.,வில் இணைக்க, உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இதுக்கு மறுப்பு தெரிவித்த கலையரசன், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு மட்டும் தெரிவித்துள்ளார். வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தியின் வன்னியர் முன்னேற்ற சங்கம், வன்னிய அடிகளார் சங்கம் உட்பட, 28 அமைப்புகளும், தி.மு.க., கூட்டணிக்கு இழுக்க, 'ஐபேக்' தரப்பு முயற்சி செய்து வருகிறது. வன்னியர் அமைப்புகள், தி.மு.க., பக்கம் வந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நெருக்கடி உருவாகும்... அதை காரணம் காட்டியே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை, கழற்றி விட்டுடலாம்னு, தி.மு.க.,வுல கணக்கு போடுறாங்களாம்...!


latest tamil news





தி.மு.க., -எம்.பி., மீது பாய்ந்த பார்த்திபன்


நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த, ‛ஒத்த செருப்பு' படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிச்சிருக்காங்க... இது தொடர்பா சமூக வலைதளத்துல கருத்து பதிவிட்ட தருமபுரி தி.மு.க.,- எம்.பி., செந்தில் குமார், ‛அண்ணனுக்கு, பா.ஜ.,வில் ஒரு சீட்டு பார்சல்'னு, விமர்சிச்சிருந்தாரு... இதனால கடுப்பான பார்த்திபன், பதிலுக்கு கொந்தளிச்சுட்டாரு... உடனே, இதுல தலையிட்ட உதயநிதி, வருத்தம் தெரிவிச்சு பார்த்திபனுக்கு தகவல் அனுப்பினாராம்...!

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-நவ-202009:22:04 IST Report Abuse
RajanRajan மச்சானை பார்தீங்களா மலைவாழை தோப்புக்குள்ளே குயிலக்கா நீ பார்த்து சொல்லு வந்தாரே காணல்லியே. ..டபுள் ஜீ யை காணல்லியே...
Rate this:
Cancel
01-நவ-202007:40:11 IST Report Abuse
அருணா ஒரு நண்பராய் திருமாவளவன் அவர்களுக்கும் பெரியார் வழி திரு வீரமணிக்கும் முக்கிய பங்கை தராமல் ஏமாற்றி விட்டீர்கள் தலைவரே.
Rate this:
Cancel
முடியட்டும் திமுக! விடியட்டும் தமிழகம்! இந்த சொடலங்கற கிளி சரியான தத்தி கிளியா இருக்கே குமாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X