சென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020
Share
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,31) அதிகபட்சமாக சென்னையில் 794 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.89 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 690 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,99,916பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 241 பேருக்கும்,

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,31) அதிகபட்சமாக சென்னையில் 794 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.89 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news



தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 690 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,99,916பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 241 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும், சேலத்தில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 133 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், திருப்பூரில் 91 பேருக்கும், ஈரோடில் 79 பேருக்கும், நாமக்கல்லில் 67 பேருக்கும், ராணிப்பேட்டையில் 61 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது.


உயிரிழப்பு


இன்று சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், திருப்பூர், ஈரோடில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, திருவாரூரில் தலா 2 பேரும், திருச்சி, மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், கோவையில் தலா ஒருவரும் என 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 794 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,89,074 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 605 பேரும், செங்கல்பட்டில் 225 பேரும், திருவள்ளூரில் 191 பேரும், சேலத்தில் 179 பேரும், ஈரோடில் 151 பேரும், கடலுாரில் 150 பேரும், திருப்பூரில் 121 பேரும், கன்னியாகுமரியில் 95 பேரும், திருவண்ணாமலையில் 87 பேரும், ராணிப்பேட்டையில் 74 பேரும், கிருஷ்ணகிரியில் 73 பேரும், துாத்துக்குடியில் 65 பேரும், தர்மபுரியில் 61 பேரும், திருவாரூர், மதுரையில் 60 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X